மும்பை: கிரிக்கெட்டின் கடவுள் எனப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், இதுவரை இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 663 போட்டிகள் விளையாடியுள்ளார். அதில் அவர் 100 சதங்கள், 164 அரைசதங்கள் உட்பட 34,347 ரன்கள் விளாசியுள்ளார்.
-
An iconic picture.
— Johns. (@CricCrazyJohns) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Sachin Tendulkar in front of his statue at Wankhede stadium. pic.twitter.com/Q7VzlRLz4W
">An iconic picture.
— Johns. (@CricCrazyJohns) November 1, 2023
Sachin Tendulkar in front of his statue at Wankhede stadium. pic.twitter.com/Q7VzlRLz4WAn iconic picture.
— Johns. (@CricCrazyJohns) November 1, 2023
Sachin Tendulkar in front of his statue at Wankhede stadium. pic.twitter.com/Q7VzlRLz4W
இவர் கடந்த 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியுடன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
கிரிக்கெட் வாழ்வில் பல சாதனைகளைப் படைத்த இவரைக் கவுரவிக்கும் வகையில், முழு உருவச் சிலை ஒன்றை மும்பை வான்கடே மைதானத்தில் அமைக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு, அதற்கான பணிகளைத் தொடங்கி முழு உருவச் சிலையானது செய்யப்பட்டது.
-
Sachin Tendulkar giving an autograph to a specially abled fan at Wankhede.
— Johns. (@CricCrazyJohns) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
- Beautiful gesture by the God of cricket.pic.twitter.com/O2E1TmjhwJ
">Sachin Tendulkar giving an autograph to a specially abled fan at Wankhede.
— Johns. (@CricCrazyJohns) November 1, 2023
- Beautiful gesture by the God of cricket.pic.twitter.com/O2E1TmjhwJSachin Tendulkar giving an autograph to a specially abled fan at Wankhede.
— Johns. (@CricCrazyJohns) November 1, 2023
- Beautiful gesture by the God of cricket.pic.twitter.com/O2E1TmjhwJ
22 அடி உயரம்: இந்த சிலை மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள சச்சின் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ளது. இதன் உயரம் சுமார் 22 அடி உயரம் ஆகும். மேலும், இந்த சிலை அவரது 50 ஆண்டுக்கால வாழ்வைச் சிறப்பிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த முழு உருவச் சிலை இன்று (நவ.01) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சச்சின் டெண்டுல்கர், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா, சரத்பவார், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: David Willey: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வை அறிவித்த டேவிட் வில்லி!