ETV Bharat / sports

England VS Netherland : புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் யாருக்கு? இங்கிலாந்து - நெதர்லாந்து போட்டி? - உலக கோப்பை கிரிக்கெட் 2023

World Cup Cricket 2023 : உலக கோப்பை கிரிக்கெட்டில் புனேவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

England
England
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 1:27 PM IST

Updated : Nov 8, 2023, 2:38 PM IST

புனே : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கனிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.

லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க அணிகள் போராடி வருகின்றன. இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டும் அரைஇறுதிக்கு தகுதி பெற்று இருந்த நிலையில் நேற்று (நவ. 7) மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது அணியாக ஆஸ்திரேலியாவும் அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று (நவ. 8) நடைபெறும் 40வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்து அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டது. அதேபோல் நெதர்லாந்து அணியும் ஏறத்தாழ அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது.

இதனால், இன்றைய ஆட்டத்தின் முடிவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாத போதும், புள்ளிப் பட்டியலில் வேண்டுமானால் மாற்றத்தை கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அதிலும் இங்கிலாந்து அணி கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அதற்கும் வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை நடப்பு உலக சாம்பியன் என்பதை மறந்து கத்துக்குட்டி அணிகள் போல் செயல்பட்டு வருகிறது.

ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் போன்று நிலைத்து மற்றும் அதிரடியாக விளையாடிக் கூடிய வீரர்கள் இருந்த போதும், நடப்பு உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. அதேநேரம் நெதர்லாந்து வீரர்கள் சவால் அளிக்கக் கூடிய வகையில் விளையாடி வருகின்றனர்.

ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய தென் ஆப்பிரிக்க அணியையே வீழ்த்தி கிரிக்கெட் ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்த்தவர்கள் நெதர்லாந்து வீரர்கள். அதனால் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு கடும் சவால் அளிக்கக் கூடிய வகையில் நெதர்லாந்து வீரர்கள் செயல்படுவார்கள். வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையும் படிங்க : ஒரு ஆட்டத்தில் ஓராயிரம் சாதனைகள்! - அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெலின் சாதனை பட்டியல்!

Last Updated : Nov 8, 2023, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.