ETV Bharat / sports

பகலிரவு டெஸ்ட்: மூன்றாம் நடுவரின் முடிவில் அதிருப்தி! - ஜோ ரூட்

சுப்மன் கில், ரோஹித் ஷர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியபோது அதை தெளிவாக பரிசீலனை செய்வதில் நடுவர்கள் நிலைத்தன்மை இல்லாமல் நடந்துகொண்டிருப்பதாக இங்கிலாந்து அணியினர் தெரிவித்திருப்பதுடன், இரு அணிகளுக்கு சமமான முறையில் நடந்துகொள்ளுமாறும் போட்டி நடுவரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

england captain joe root
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்
author img

By

Published : Feb 25, 2021, 3:08 PM IST

அகமதாபாத்: மூன்றாம் நடுவர் தனது முடிவில் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று இந்தியா - இங்கிலாந்து பகலிரவு போட்டியின் நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத்திடம் இங்கிலாந்து அணியினர் கேட்டுக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் முடிந்த பின்னர் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் மற்றும் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஆகியோர் போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத்தை சந்தித்தனர். அப்போது போட்டியின்போது சுப்மன் கில், ரோஹித் ஷர்மா ஆகியோரின் விக்கெட் விஷயத்தில் மூன்றாம் நடுவரால் எடுக்கப்பட்ட முடிவு இந்திய அணிக்கு சாதகமாக அமைந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஸ்டூவர்ட் ப்ராட் பந்தில் இந்திய தொடக்க பேட்ஸ்மேன் சுப்மன் கில் அடித்த பந்தை, ஸ்லிப்பில் நின்ற பென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்தார். இந்த விக்கெட் மூன்றாம் நடுவரின் பரிசீலனைக்கு சென்றது. அதில், பென் ஸ்டோக்ஸ் பிடித்த பந்து புற்களில் பட்டிருப்பதாகக் கூறி அவுட் தரவில்லை.

அதேபோல், ரோஹித் ஷர்மாவும் இறங்கி ஆட முற்பட்டு பந்தை தவறவிட்டார். அந்த நேரத்தில் விரைந்து அவரை ஸ்டம்பிங் முறையில் அவுட் செய்தார் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ். ரோஹித் தனது கால்களை கிரீஸினுள் முழுவதுமாக வைப்பதற்குள்ளாகவே ஃபோக்ஸ் ஸ்டம்பிங் செய்தபோதிலும், அந்த அவுட்டும் மூன்றாம் நடுவரால் மறுக்கப்பட்டது.

இந்த இருசம்பவங்களினால் ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ள ஜோ ரூட் மற்றும் கிறிஸ் சில்வர்வுட், நடுவர்கள் இந்தியாவுக்கு சாதமாக செயல்படுகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளதாக தெரிவித்தனர்.

அத்துடன், இதுபோன்ற சமயங்களில் நடுவர்கள் முடிவு எடுப்பதற்கு இருக்கும் சவால்கள் மற்றும் சிரமத்தையும் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த அவர்கள், நடுவர்கள் தாங்கள் எடுக்கும் முடிவில் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

நடுவர்களின் முடிவு வெறுப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ள மற்றொரு இங்கிலாந்து வீரர் ஸக் கிராவ்லே, அதிர்ஷ்டம் என்பது இரு அணிகளுக்கு சமமாக இருக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு முதல் நாள் ஆட்டம் அப்படி அமையவில்லை என்று கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே மொட்டேரோ நடைபெற்று பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தனது முதல் இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. இன்று (பிப். 25) இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. ரோஹித் ஷர்மா 57, ரஹானே 1 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் ஹசாரே: உச்சகட்ட ஃபார்மில் உத்தப்பா; கேரளா த்ரில் வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.