ETV Bharat / sports

கெத்து காட்டிய இந்தியா: மகிழ்ச்சியில் குடியரசுத் தலைவர்! - இந்திய அணி வெற்றி

டெல்லி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குச் செல்ல தகுதிபெற்றுள்ள இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்
author img

By

Published : Mar 6, 2021, 7:29 PM IST

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து, டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குச் செல்லும் தகுதியைப் பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்துவரும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றதன் மூலம் முதல்முறையாக நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

  • I feel delighted that I had the opportunity to inaugurate the magnificent stadium where the first two test matches have seen India win. My best wishes to all the players for their excellent performance in the final.

    — President of India (@rashtrapatibhvn) March 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நான் திறந்துவைத்த சிறப்பான மைதானத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. அதனைத் திறந்துவைப்பதில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் வெற்றிக்கு ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.