ஹைதராபாத்: உலகில் உள்ள பிரீமியர் லீகை ஒப்பிடுகையில் ஐபிஎல் அதாவது இந்தியன் பிரிமியர் லீக் ரசிகர்கள் மத்தியில் தொடக்கம் முதலே பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடர் 16 சீசன்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று வருகின்றன.
ஐபிஎல் 2023 தொடருக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேரள மாநிலம் கொச்சியில் ஏலம் நடத்தப்பட்டது. இதில் 80 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார்கள். அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான சாம் கரன் ரூ18.50 கோடிக்கும், ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் 17.50 கோடிக்கும், இங்கிலாந்து அணியின் மற்றொறு ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடிக்கும் தேர்வு ஆகினர்.
இந்நிலையில், ஐபிஎல் 2024ஆம் ஆண்டு தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதேபோல், இதற்கு முன்பாக பெண்கள் பிரீமியர் லீக்கிற்கான ஏலம் டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும், இந்த லீக் போட்டியானது 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிடப்படலாம் என கூறப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தனிநபரின் தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும் - இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா!