ETV Bharat / sports

IND VS NZ: இந்தியா - நியூசிலாந்து கடந்த வந்த பாதை! சவால் அளிக்கும் நியூசிலாந்து... சமாளிக்குமா இந்தியா? - தோனி

Cricket World Cup 2023: ஐசிசி உலக கோப்பை தொடரில் இதுவரை இந்தியா - நியூசிலாந்து அணி 9 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் நியூசிலாந்து அணி 5 முறையும், இந்திய அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.

India - New Zealand Head to Head
India - New Zealand Head to Head
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 7:01 PM IST

தர்மசாலா: ஐசிசி உலக கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 21வது லீக் ஆட்டம் நாளை (அக். 22) தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. நடப்பு உலக கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த இரு அணிகளும் எதிர்கொண்ட 4 போட்டிகளிலும் வென்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இரு இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி இந்திய அணியை விட நெட் ரன்ரேட் அதிகமாக வைத்து இருப்பதால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதுவரை இரண்டு முறை உலக கோப்பைகளை வென்ற இந்திய அணி, இம்முறை சொந்த மண்ணில் நடப்பதால் மூன்றாவது முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முன்னைபுடன் விளையாடி வருகிறது. மறுப்பக்கம் கடந்த இரு சீசன்களாக (2015 மற்றும் 2019) இறுதி போட்டி வரை முன்னேறி தோல்வியை தழுவிய வேதனையுடனும், வெறியுடனும் இந்த உலக கோப்பையில் களம் இறங்கி விளையாடி வருகிறது நியூசிலாந்து அணி.

அதற்கு ஏற்றவாரு முதல் போட்டியில் இருந்தே வெறி கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி, இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்று மிகுந்த பலத்துடன் காணப்படுகிறது. இந்திய அணியோ 2003ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு இதுவரை நியூசிலாந்து அணியை வென்றது இல்லை என்ற மோசமான சாதனையுடன் தொடர்ந்து வருகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை நடந்த உலக கோப்பை போட்டிகளில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போட்டிகள் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

உலக கோப்பை 1975

உலக கோப்பை தொடரின் ஆரம்ப நிலையில், இவ்விரு அணிகளும் மோதின. 60 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சையத் அபித் அலி 70 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் எவரும் பெரிதாக சோப்பிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி 58.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிறகு 233 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் கிளென் டர்னர் 114 ரன்கள் அடித்து அசத்தினார். அதற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை 1979

உலக கோப்பை 2வது சிசனில், மீண்டும் இவ்விரு அணிகளும் மோதிக் கொண்டன. கடந்த சீசன் போல் நியூசிலாந்து அணியே இம்முறையும் வென்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி - இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களம் இறங்கிய வெங்கடராகவன் தலைமையிலான இந்திய அணி 182 ரன்களுகே ஆட்டமிழந்தது.

அதன்பின் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய நியூசிலாந்து அணி தனது முதல் விக்கெட்டை இழப்பதற்கு எடுத்து கொண்ட ரன்கள் 100 ஆகும். இறுதியில் நியூசிலாந்து அணி 57 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

உலக கோப்பை 1987

இந்த சீசனை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நடத்தின. இந்த உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் இரண்டு முறை மோதின. அவ்விரண்டிலுமே இந்திய அணியே வெற்றி பெற்றது. கபில் தேவ் தலைமையிலான அணி முதல் போட்டியில் 50 ஓவர்களுக்கு 252 ரன்கள் எடுத்தது. ஆனால் நியூசிலாந்து அணியோ 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

மற்றொரு போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து 221 ரன்கள் எடுக்க, அதை இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேஸிங் செய்து எளிதில் வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சுனில் கவாஸ்கர் 103 ரன்களும், முகமது அசாருதீன் 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

உலக கோப்பை 1992

50 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த உலக கோப்பை தொடரின் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 230 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 84 ரன்கள் எடுத்தார். இந்த இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களிலேயே 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

உலக கோப்பை 1999

அசாருதீன் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி 48.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழந்து 253 ரன்கள் சேர்த்து உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 4-க்கு 2 என வெற்றி கணக்கை உயர்த்தியது.

உலக கோப்பை 2003

இந்த உலக கோப்பையில் தொடக்கம் முதலே ஆதிக்கம் சொலுத்தி வந்தது இந்திய அணி. இந்த தொடரின் அரையிறுதி போட்டியில், இவ்விரு அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஜாகீர் கான் 8 ஓவர்கள் வீசி 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதன்பின் களம் இறங்கிய இந்திய அணி 40 ஓவர்களில் அந்த இலக்கை எட்டியது. இதன் மூலம் இறுதி போட்டியை இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்டது.

உலக கோப்பை 2019

இடைபட்ட 2007, 2011, 2015 உலக கோப்பையில் மோதிக் கொள்ளாத இந்த இவ்விரு அணிகள் 2019 உலக கோப்பையில் இரு முறை மோதி கொள்கிறது. லீக் ஆட்டம் மழையால் தடைபட, அரையிறுதியில் இவ்விரு அணிகளும் சந்தித்தன. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 239 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து களம் கண்ட இந்திய அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மேலும், இதில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரியின் அடிப்படையில் தோல்வியை தழுவி கோப்பையை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாஜக கொடி கம்பம் அகற்றம் விவகாரம்: "100 நாட்களில் 100 கொடிக்கம்பங்கள் நடப்படும்" - அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.