ETV Bharat / sports

PAK VS SA: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்!

நடப்பாண்டு உலக கோப்பை தொடரின் 26வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி நாளை சென்னையில் நடைபெறுகிறது.

south africa vs pakistan
south africa vs pakistan
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 10:31 PM IST

சென்னை: ஐசிசி நடத்தும் உலக கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. இதுவரை நடைபெற்ற லீக் போட்டியின் முடிவில், இந்திய அணி முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முறையே 2, 3, 4 என்ற இடங்களில் உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இந்நிலையில், இத்தொடரின் 26வது லீக் ஆட்டம் நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.

தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை நடப்பாண்டு உலக கோப்பை போட்டியில் தொடக்கம் முதலே அசத்தி வருகிறது. அந்த அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் அபார வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து வருகிறது.

தொடக்க வீரரான குயின்டன் டி காக் நடப்பு சீசனில் 3 சதங்கள் விளாசி அற்புதமான ஃபார்மில் உள்ளார். அதேபோல் ஹென்ரிச் கிளாசென் அவரது அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். சக வீரர்களான எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ரஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் அணிக்கு பக்க பலமாக உள்ளனர். மேலும், காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா கடந்த இரு போட்டிகளில் கலந்து கொள்ளாத நிலையில், இந்த போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்து வீச்சை பொறுத்தவரை ககிசோ ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் நல்ல நிலையிலேயே உள்ளனர். சுழற்பந்து வீச்சில் கேசவ் மகாராஜா இதுவரை பெரிதாக விக்கெட்கள் கைபற்றவில்லை என்றாலும், தனது பந்துவீச்சில் ரன்களை விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்தி வருகிறார். நாளைய போட்டி சென்னையில் நடைபெறுவதால் தப்ரைஸ் ஷம்சி அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நடப்பாண்டு உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணி தொடக்கம் முதலே தடுமாறி வருகிறது. இதுவரை விளையாடிய போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்திய, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் என கடந்த மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான நிலையில் உள்ளது. அதனால் இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பேட்டிங்கில் முகம்து ரிஸ்வான் மட்டுமே தொடர்ச்சியாக அணிக்கு ரன்கள் சேர்த்த வண்ணம் வருகிறார். பாபர் அசாம், அப்துல்லா ஷபீக் ஆகியோர் நல்ல நிலையில் இருந்தாலும், அவர்களின் பங்களிப்பு அணிக்கும் இன்னும் தேவையாக உள்ளது. மற்ற வீரர்கள் எவரும் இதுவரை பொரிதாக சோபிக்கவில்லை.

பந்து வீச்சில் ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி, ஷதாப் கான் ஆகியோர் ஃபார்மில் இருந்தாலும், ஹரிஸ் ரவூப் ரன்களை அதிகம் வழங்குவது அந்த அணிக்கு பின்னடைவாக அமைகிறது. அதனால் தவறுகளை திருத்திக்கொள்ளும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வெல்ல முடியும்.

மோதும் அணிகள்: தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான்

நேரம்: பிற்பகல் 2 மணி

இடம்: எம்.ஏ சிதம்பரம் மைதானம், சென்னை

கணிக்கப்பட்ட இரு அணிகளுக்கான பிளேயிங் 11

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக் (விகீ), டெம்பா பவுமா ( கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மாகோ ஜான்சன், கேசவ் மகாராஜா, ககிசோ ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி, தப்ரைஸ் ஷம்சி.

பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விகீ), சவுத் ஷகீல், ஷதாப் கான், இப்திகார் அகமது, ஷாஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப், உசாமா மிர், ஆகா சல்மான்.

இதையும் படிங்க: IPL AUCTION 2024: ஐபிஎல் 2024 ஏலம் இடம் மற்றும் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.