மும்பை: ஐசிசி உலக கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதன் 23வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை வங்கதேசம் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
நடப்பு உலக கோப்பை தொடரில் ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்கா அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இருப்பினும், நெதர்லாந்து அணிக்கு எதிரான தோல்வி யாரும் நினைத்து பார்க்காதது. ஆனால் அதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான அட்டத்தில் 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களது வலிமையை நிரூபித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை பொருத்தவரை தொடக்க வீரரான குயின்டன் டி காக் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் இரண்டு சதங்களை பூர்த்தி செய்து, அர்புதமான ஃபார்மில் உள்ளார். மிடில் ஆர்டரில் களம் இறங்கும் ஹென்ரிச் கிளாசென் கடந்த போட்டியில், அவரது ஆக்கிரோஷமான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியை 400 ரன்கள் நெருங்கச் செய்தார். மற்ற வீரர்களான மார்க்ரம், டேவிட் மில்லர், வான் டெர் டுசென் ஆகியோர் பக்க பலமாக உள்ளனர்.
அதேபோல் பந்துவீச்சில் ரபாடா மற்றும் மார்கோ ஜான்சன் இதுவ்ரை விளையாடிய 4 போட்டிகளில் 8 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர். மற்ற பந்து வீச்சாளர்களான லுங்கி என்கிடி, ஜெரால்ட் கோட்ஸி மற்றும் சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் ஆகியோர் கூடுதல் பலமாக இருப்பதால் இவர்கள் அபார ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் வங்கதேசம் அணியை எடுத்துகொண்டால், நேருக்கு மாறாக 4 போட்டிகள் விளையாடி 1 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக கடந்த இரு போட்டிகளில் அந்த அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான ஷாகிப் அல் ஷசன் காயம் காரணமாக விளையாடததால் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பேட்டிங்கில் லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரும், பந்து வீச்சில் மகேதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோரும் இருப்பதால், தென் ஆப்பிரிக்கா அணிக்கு சவால் அளிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மோதும் அணிகள்: தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம்.
நேரம்: பிற்பகல் 2 மணி.
இடம்: மும்பை வான்கடே மைதானம்.
பிட்ச் ரிபோர்ட்
பிட்சானது பேட்டர்களுக்கு சாதகமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அதிக வெப்பமாக 37 டிகிரி செல்சியஸ் வரை பிற்பகலில் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதுவரை இந்த மைதானத்தில் நடப்பாண்டு உலக கோப்பை தொடரில் ஒரே ஒரு போட்டி மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அதில் தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 399 ரன்களை குவித்தனர். அந்த அணியே போட்டியையும் வென்றது. அதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளுக்கான கணிக்கப்பட்ட பிளேயிங் 11
தென் ஆப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக் (விகீ.), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், ஜெரால்ட் கோட்ஸி, லுங்கி என்கிடி.
வங்கதேசம்: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விகீ), தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, நசும் அகமது அல்லது ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் சாகிப் அல்லது ஹசன் மஹ்முத்.
இதையும் படிங்க: Reece Topley: உலகக் கோப்பை தொடரில் இருந்து ரீஸ் டாப்லி விலகல்.. பின்னணி என்ன?