சென்னை: ஐசிசி நடத்தும் 13வது உலக கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 21 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 22வது லீக் ஆட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிடம் தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் அணி, இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான பாபர் அசாம், நடப்பாண்டு உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே அரைசதம் அடித்த அவர், மற்ற போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை.
அந்த அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் இதுவரையில் இந்த தொடரில் அதிக ரன்கள் சேர்த்த பட்டியலில் 294 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்தாலும், மறுமுனையில் அவருக்கு பெரிதாக ஆதரவு கிடைக்கவில்லை என்பது தான் உன்மை.
மிடில் ஆடரில் களம் இறங்கும், சவுத் ஷகீல், இப்திகார் அகமது ஆகியோர் தங்களது பங்களிப்பை இதுவரை சரியாக செய்யவில்லை. கடந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி 5 விக்கெட்களை கைப்பற்றினாலும், மற்ற பந்து வீச்சாளர்களான ஹரிஸ் ரவூப் மற்றும் ஹசன் அலி எதிரணியினருக்கு அவர்களால் அழுத்தத்தை எற்படுத்த முடியவில்லை.
அதேபோல் சுழற்பந்து வீச்சாளர்களும் விக்கெட்களை வீழ்த்த தவறுகின்றனர். தொடர் தோல்விகளை கண்ட அவர்கள் வரும் போட்டியில் வெற்றி பெற வேண்டும், இல்லையெனில் அரையிறுதி சுற்றுக்குள் நுழைவதில் சிக்கல் ஏற்படலாம்.
மறுமுனையில், ஆபாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால், இந்த தொடரில் பெரிதாக வெற்றிகளை பெறவில்லை என்றாலும், நடப்பு சாம்பியானான இங்கிலாந்து அணியை வீழ்த்தி, முன்னனி அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக இங்கிலாந்து அணியின் டாப் ஆடர்களை எல்லாம் ஆப்கானிஸ்தான் அணி அவர்களது சுழற் ஜாலத்தை வைத்தே வீழ்த்தினர். மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியானது சென்னையில் நடைபெறுவதால், அவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து பாகிஸ்தான் பேட்டர்களை வீழ்த்த நினைப்பார்கள்.
அதனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு சுழற்பந்தை எதிர்கொள்வதில் பெரும் சாவால் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கை பார்கையில், தொடக்க வீரரான குர்பாஸை தவிர்த்து மற்ற வீரர்கள் இதுவரை பெரிதாக எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சுழற்பந்து வீச்சு ஒருபக்கம் அவர்களுக்கு கைகொடுக்கும் பட்சத்தில், அவர்கள் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டால் வெற்ற பெற அதிக வாய்ப்புகள் உள்ளது எனலாம்.
ஆட்ட நேரம்: பிற்பகல் 2 மணி.
மைதானம்: எம்ஏ சிதம்பரம் மைதானம் சென்னை.
கணிக்கப்பட்ட இரு அணிகளுக்கான பிளேயிங் 11
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில் (விகீ), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஃபஸ்ஹாக்.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விகீ), சவுத் ஷகீல், முகமது நவாஸ் அல்லது ஷதாப் கான், இப்திகார் அகமது, உசாமா மிர், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிடி.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வாங்குறீங்களா.. கொஞ்சம் கவனீங்க..! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!