துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், பவுலிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விளையாடுகின்றனர்.
பாகிஸ்தான் அணியில், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுஃப், ஷஹீன் அஃப்ரிடி ஆகியோர் உள்ளனர்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 151 ரன்களை சேர்த்தது. புவனேஷ்வர் குமார் 5 ரன்களுடனும், முகமது ஷமி ரன்கள் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணியின் பேட்டிங்கை பொருத்தவரை, கேப்டன் விராட் கோலி 49 பந்துகளுக்கு, 5 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 57 ரன்கள் எடுத்தார். ரிஷ்ப் பண்ட் 30 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் சேர்த்தார்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஷஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டும், ஷதாப் கான், ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். முடிவின் 152 ரன்கள் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.