டெஸ்ட் கிரிக்கெட்டின் தனித்துவமே நிதானமான ஆட்டத்தை கடைப்பிடிப்பதுதான். சில சமயங்களில் வீரர்களின் நிதானமான ஆட்டம் ரசிகர்களை ’உச்’ சொல்லவைக்கும். அந்தவகையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டமும் அவ்வாறே இருந்தது. நேற்று நியூசிலாந்துக்கு எதிராக சிட்னியில் தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதல் ரன் எடுக்க 39 பந்துகளை அவர் எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் தென்பட்டது.
இந்தத் தொடரில் அவர் தொடர்ந்து நான்கு முறையும் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் நீல் வாகனரிடமே அவுட்டானதால் இப்படியான ஒரு இன்னிங்ஸை விளையாடினார். 39ஆவது பந்தில் ஸ்டீவ் ஸ்மித் தனது முதல் எடுத்தபோது ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோஷத்தை எழுப்பினர்.
ஸ்டீவ் ஸ்மித்தின் இந்த இன்னிங்ஸை ஓவர்டேக் செய்யும் வகையில் இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட் 12 ஆண்டுகளுக்கு முன்னரே விளையாடியுள்ளார். அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதே சிட்னி மைதானத்தில் அவர் அப்படி விளையாடியதுதான் அதன் ஸ்பெஷாலிட்டி. 2007-08ஆம் ஆண்டில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
இதில், சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், இந்திய அணிக்கு எதிராகவும் அப்போதைய நடுவர்களான ஸ்டீவ் பக்னர், மார்க் பென்சன் தீர்ப்பு வழங்கியதும், இந்திய வீரர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூவ் சைமண்ட்ஸை நோக்கி Monkey என்ற சொன்னதும் என பல சர்ச்சைகள் அடங்கிய அப்போட்டியில்தான் டிராவிட் தனது வழக்கமான ஆட்டத்தை கடைப்பிடித்தார்.
-
Steve Smith's run of dot balls made us think of another famous SCG dry spell - this time it was Rahul Dravid's 40 consecutive dots in 2008!#AUSvNZ #AUSvIND pic.twitter.com/xArETgVYVq
— cricket.com.au (@cricketcomau) January 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Steve Smith's run of dot balls made us think of another famous SCG dry spell - this time it was Rahul Dravid's 40 consecutive dots in 2008!#AUSvNZ #AUSvIND pic.twitter.com/xArETgVYVq
— cricket.com.au (@cricketcomau) January 3, 2020Steve Smith's run of dot balls made us think of another famous SCG dry spell - this time it was Rahul Dravid's 40 consecutive dots in 2008!#AUSvNZ #AUSvIND pic.twitter.com/xArETgVYVq
— cricket.com.au (@cricketcomau) January 3, 2020
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 463 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாடும்போது 18 ரன்கள் எடுத்த டிராவிட் அடுத்து 19ஆவது ரன் எடுக்க 40 பந்துகளையும் டாட் பாலாக வைத்து ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களை படாதபாடு படுத்தினார்.
அவர் எப்போது ஒரு ரன் எடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன் மைதானத்திலிருந்த ரசிகர்கள் இறுதியாக பிரட் லீயின் பந்துவீச்சில் தனது 19ஆவது ரன்னை எடுத்த போது சதம் விளாசும் வீரர்களுக்கு பாராட்டு வழங்குவதைப் போல எழுந்து நின்று கைகளை தட்டி கரகோஷம் எழுப்பினர். இறுதியில் டிராவிட் 160 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் உட்பட 53 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.