ட்ரைவ் ஷாட் ஆடுவது எப்படி? இன்ஸ்டாவில் டிப்ஸ் வழங்கும் ஸ்டீவ் ஸ்மித் - பேட்டிங் டிப்ஸ் வழங்கும் ஸ்டீவ் ஸ்மித்
கரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித், பந்தை தரையாடு தரையாக ட்ரைவ் ஷாட் ஆடுவது எப்படி என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று நிமிடத்திற்கு வீடியோ ஒன்றை ஸ்டீவ் ஸ்மித் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், "பேட்டிங் செய்வது குறித்து சில டிப்ஸ்களை பகிர்ந்துகொள்ளுமாறு ஏராளமான ரசிகர்கள் என்னிடம் கேட்டுகொண்டனர். அதனால், இந்த வீடியோவில் அவர்களுக்கு சில டிப்ஸ்களை வழங்குகிறேன். பொதுவாக ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஷாட்டுகளை அடிப்பதில் இரண்டு ஸ்விங் இருக்கும்.
மணிக்கட்டு உதவியுடன் பந்தை தரையோடு தரையாக ட்ரைவ் ஷாட் ஆடுவது ஒரு ஸ்விங். பாட்டம் ஹெண்ட் உதவியுடன் பந்தை தூக்கி அடிப்பது மற்றொரு ஸ்விங் ஆகும். தற்போது மணிக்கட்டு உதவியுடன் எப்படி ட்ரைவ் ஷாட் ஆட வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோவில் பார்ப்போம். மற்றொரு ஸ்விங் குறித்து அடுத்த வீடியோவில் பார்ப்போம்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
தற்போது பந்தை ட்ரைவ் ஷாட் ஆடும் போது, ஃபுட் ஒர்க்கை மிக முக்கிய கடைப்பிடிக்க வேண்டும். எந்த திசையில் நீங்கள் ட்ரைவ் ஷாட் ஆட விரும்புகிறீர்களோ அந்த திசையை நோக்கி உங்களது ஃபுட்ஒர்கை நகர்த்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே உங்களால் பந்தை தரையோடு தரையாக அடிக்க முடியும்" என பேசினார்.
முன்னதாக பேட்டிங்கின் போது கை-கண் ஒருங்கிணைப்பை எப்படி மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர் தனது வீட்டின் சுவரில் பந்துகளை அடித்து விளையாடியவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ‘கோலி எனக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியமே இல்லை... ஆனாலும் அளித்தார்’ - ஸ்டீவ் ஸ்மித் ஷேரிங்ஸ்!