கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த, விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளனர்.
கடந்த ஒருவாரமாக பன்டேஸ்லிகா, கே-லீக் உள்ளிட்ட கால்பந்து தொடர்கள் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, விளையாட்டு வீரர்களும், அரசின் கட்டுப்பாடுகளுடன் கூடிய பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது பயிற்சிகளை மேற்கொள்ளும் காணொலியை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
அதில், ’நான் இந்த இடத்தை மிகவும் தவறவிட்டேன். ஆனால் மீண்டும் இந்த இடத்திற்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று பதிவிட்டு, அவர் பயிற்சி மேற்கொள்ளும் காணொலியையும் பகிர்ந்துள்ளார்.
- View this post on Instagram
I’ve missed this place! Slowly easing through the gears but enjoying being back ☀️🏏❤️
">
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்த ஆண்டர்சன், அந்த அணிக்காக 151 டெஸ்ட் போட்டிகளில் 584 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பண்டஸ்லிகா: மெயின்ஸ் அணியை அடித்து நொறுக்கிய ஆர்.பி. லீப்ஜிக்!