ETV Bharat / sports

ஐபிஎல் 2020 தொடரில் வீட்டிலிருந்தே வர்ணனை சாத்தியமே - இர்பான் பதான்

டெல்லி: ஐபிஎல் 13ஆவது சீசனில் வீட்டிலிருந்தே வர்ணனை செய்யும் புதுமையான முயற்சியை, போட்டியை ஒளிபரப்பு செய்யும் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

IPL 2020
ஐபிஎல் 2020
author img

By

Published : Jul 23, 2020, 2:10 PM IST

மூன்று அணிகள் ஒரே போட்டியில் விளையாடிய 3டிசி சாலிடரிட்டி கோப்பை போட்டி கடந்த வாரம் தென் ஆப்பரிக்காவில் நடைபெற்றது. புதுமையான முறையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியை உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர். தென் ஆப்பரிக்காவிலுள்ள சென்சூரியன் பார்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்தியாவிலிருந்து இர்பான் பதான், தீப்தாஸ் குப்தா, சஞ்சய் மஞ்சரேகர் உள்ளிட்டோர் அவர்களது வீட்டில் இருந்தவாறு வர்ணனை செய்தனர்.

கரோனா காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விஷயங்கள் வழக்கமான நடைமுறையிலிருந்து விலகி புதுமையான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிரிக்கெட் வர்ணனையும் மைதானத்தில் இல்லாமல் வீட்டில் இருந்தவாறே செய்யும் புதுமையான முயற்சி இந்தப் போட்டியில் சோதனை முயற்சியாக நிகழ்த்தப்பட்டது.

வர்ணனை மட்டுமில்லாமல் சில தொழில்நுட்ப கலைஞர்களும் வீட்டிலிருந்தபடியே தங்களது பணிகளை செயல்படுத்தியுள்ளனர். இந்த முயற்சியானது நல்ல பலனை தந்திருப்பதால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதனை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரின் முக்கிய வர்ணனை மொழிகளான ஆங்கிலம், இந்தி தவிர்த்து பிராந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் இந்த முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். வீட்டில் இருந்தவாறு வர்ணனை செய்த அனுபவம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் கூறியதாவது:

"இது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. இணையத்தின் வேகத்தில் மாறுபாடு இருந்ததால் பேசும்போது குரலின் தரத்தில் பிரச்னை இருக்கும் என்ற கவலை இருந்தது. ஏனென்றால் நேரலையின்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தொழில்நுட்பம் நமது கட்டுப்பாட்டில் இல்லை எப்போதும் இருக்காது. இருப்பினும் ஒளிபரப்பாளர்கள் அனைத்தையும் சிறப்பாக கையாண்டார்கள்.

கண்காட்சி போட்டியாக இருந்தாலும், நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் அனைத்தும் சரியாக வரவேண்டும் என்று அனைவரும் தீவரமாக பணியாற்றினோம்.

இதில் சிக்கல்கள், சவால்களும் நிறைந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் இணையத்தின் வேகம் மிக முக்கியமானது. 5 எம்பிபிஎஸ் முதல் 20 எம்பிபிஎஸ் வரை குறைந்தபட்ச இணையதளத்தின் வேகம் தேவைப்படும். வேறு வேறு இடங்களில் அமர்ந்து வழக்கமான வர்ணனையின்போது வர்ணனையாளர்களுக்குள் நிகழும் கெமிஸ்ட்ரியை வீட்டில் இருந்தவாறு கொண்டுவருவதென்பது சவால் நிறைந்த விஷயமாக இருக்கும்.

Irfan pathan
இந்திய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான்

வர்ணனை என்பது போட்டி சம்மந்தமாக மட்டுமில்லாமல், வீரர்களை விளையாட்டு திறன் பற்றி ஆழ்ந்த விவரிப்பாகவும் உள்ளது. அந்த வகையில் வீட்டிலிருந்து வர்ணனை என்பது ஒரு வாய்ப்பாக இருந்தாலும், எவ்வளவு காலம் இதைப் பயன்படுத்தலாம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்றார்.

இதையும் படிங்க: ஐபிஎல் விளையாடுவதில் மகிழ்ச்சி - கேன் வில்லியம்சன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.