ETV Bharat / sports

டி20 தரவரிசையில் 4ஆவது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி - Virat Kohli ranked fourth in ICC T20I rankings for batsmen

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர் கே.எல். ராகுலைப் பின்னுக்குத் தள்ளி இந்திய கேப்டன் விராட் கோலி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Dubai, Virat Kohli, ICC T20 rankings, விராட் கோலி, ஐசிசி டி20 தரவரிசை, டி20 தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி, Virat Kohli ranked fourth in ICC T20I rankings for batsmen, துபாய்
Virat Kohli ranked fourth in ICC T20I rankings for batsmen
author img

By

Published : Mar 24, 2021, 6:27 PM IST

துபாய்: டி20 வரலாற்றில் 3,000 ரன்கள் எடுத்த முதல் வீரரான விராட் கோலி, பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி டி20 தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய பின்னர் தரவரிசையில் இந்தியா பேட்ஸ்மேன்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

கடைசி டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 80 ரன்களைக் குவித்த கோலி, இப்போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வழிசெய்தார். இதன்மூலம் தரவரிசையில் கோலி, கே.எல். ராகுலைப் பின்னுக்குத் தள்ளி இந்திய தரப்பில் முதல் வீரராக வந்துள்ளார்.

அந்தப் போட்டியில் ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தால் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 14ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்தத் தரவரிசைப் பட்டியலானது அபுதாபியில் நடந்த ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே தொடரைத் தவிர்த்து கணக்கில் எடுத்துக்கொண்டது.

வரும் அக்டோபர் மாதம் டி20 ஆண்கள் உலகக்கோப்பை நடக்கவிருக்கும் வேளையில் இந்திய அணி வீரர்கள், ஸ்ரேயாஸ் ஐயர் ஐந்து இடங்கள் உயர்ந்து 26ஆவது இடத்திற்கும், அதே நேரத்தில் சூரியகுமார் யாதவ், ரிஷப் பந்த் சிறு முன்னேற்றமும் அடைந்துள்ளனர்.

தொடரின் இரண்டாவது போட்டியில் அறிமுகமான சூர்யகுமார், அந்தப் போட்டியில் பேட்டிங் செய்யாததால் எந்தப் புள்ளிகளையும் பெறமுடியவில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் 57, 32 ரன்கள் குவித்ததன் மூலம் 66ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் பந்த் 11 இடங்கள் உயர்ந்து தரவரிசையில் 69ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Dubai, Virat Kohli, ICC T20 rankings, விராட் கோலி, ஐசிசி டி20 தரவரிசை, டி20 தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி, Virat Kohli ranked fourth in ICC T20I rankings for batsmen, துபாய்
ஐசிசி ட்வீட்

வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், கடைசி ஆட்டத்தில் 15 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்ததால் 21 இடங்கள் உயர்ந்து 24ஆவது இடத்திலும், ஹார்திக் பாண்டியா 47 இடங்கள் முன்னேறி 78ஆவது இடத்திலும் உள்ளனர்.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை, டேவிட் மாலன் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். ஜோஸ் பட்லர் ஒரு இடம் உயர்ந்து 18ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அதில் ரஷித் நான்காவது இடத்திலும், வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர் 22ஆவது இடத்திலும், மார்க் வுட் 27ஆவது இடத்திலும் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முன்னேறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளார். தென்ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்ஸி இப்போது முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். பிப்ரவரி 5, 2018 முதல் ரஷீத் முதலிடத்தில் இருந்தார், மார்ச் 2020ல் இரண்டு நாள்களுக்கு மட்டும் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

ஐசிசி ஆண்கள் ஒருநாள் வீரர் தரவரிசையில், புனேயில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய வீரர் ஷிகர் தவான் 98 ரன்கள் அடித்ததன் மூலம் 15ஆவது இடத்திற்கும், பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார் 20ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். இங்கிலாந்து தரப்பில் 94 ரன்கள் எடுத்த ஜானி பேர்ஸ்டோவ் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க: இங்கிலாந்தை வீழ்த்தியது இனிமையான வெற்றி - கோலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.