ETV Bharat / sports

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு கரோனா உறுதி! - கரோனா தொற்று

தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க வீரருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

three-south-africa-cricketers-isolated-after-one-tests-covid-19-positive

author img

By

Published : Nov 19, 2020, 7:24 PM IST

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான இருநாட்டு அணி வீரர்களும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள், அணி ஊழியர்கள் என 50 பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில் அணி வீரருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று உறுதிசெய்யப்பட்ட வீரரின் பெயரை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை.

இது குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அணியைச் சேர்ந்த ஒரு வீரருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த இரு வீரர்களையும் தனிமைப்படுத்தியுள்ளோம். அவர்களை சிஎஸ்ஏ மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

மேலும் தொற்று உறுதிசெய்யப்பட்ட வீரர்களுக்கான மாற்று வீரர்களை அறிவிப்பது குறித்து ஆலோசித்துவருகிறோம். அதேசமயம் இந்த வீரர்களின் இடத்தை நிரப்ப புதுமுக வீரர்களை அணியில் இணைத்துள்ளோம். ஆனால் அவர்கள் பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே பங்கேற்பார்கள்" என்று தெரிவித்துள்ளது.

தென் அப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நவம்பர் 27ஆம் தேதி நியூலேண்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.