ETV Bharat / sports

#INDvBAN: தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து விலகிய முக்கிய வீரர்! - இந்திய அணியின் கேப்டன்  விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு

இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான தொடரிலிருந்து வங்கதேச அணியின் நட்சத்திர வீரரான தமிம் இக்பால் தனிப்பட்ட காரணங்களினால் விலகியுள்ளார்.

Tamim withdraws from India tour due
author img

By

Published : Oct 27, 2019, 8:22 AM IST

INDvBAN: இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டி20 போட்டியானது நவம்பர் 3ஆம் தேதி டெல்லியில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் இரு அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கதேச அணியின் நட்சத்திர வீரரான தமிம் இக்பால் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவுடனானத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் கூறுகையில், இக்பால் தனது இரண்டாவது குழந்தைக்காக காத்திருக்கிறார். தற்போது வரை அவர் எங்களிடம் தனது மனைவியின் உடல் நிலை குறித்து மட்டுமே கூறியுள்ளார். அதைத்தவிர வேறு எந்தவித தகவலையும் எங்களிடம் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, தொடக்க வீரரான ரோஹித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #SaveSujith மீண்டு வா சுஜித்! - முதன்மை தகவல்கள் நேரலையில்

Intro:Body:

Tamim iqbal - sports

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.