ETV Bharat / sports

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்:  ரீ என்ட்ரி தரும் டூபிளெசிஸ்

author img

By

Published : Mar 2, 2020, 7:03 PM IST

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்க அணியில் முன்னாள் கேப்டன் 'டூபிளெசிஸ் இடம்பெற்றுள்ளார்.

South Africa recall du Plessis, van der Dussen for India ODIs

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

du Plessis, van der Dussen
டூபெளிசிஸ் - வான் டர் டூசேன்

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் மார்ச் 12ஆம் தேதி தரம்சாலாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில், உலகக்கோப்பை ஒருநாள் தொடருக்கு பின் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு, முன்னாள் கேப்டன் டூபிளெசிஸ், வான் டர் டூசேன் ஆகியோர் திரும்பியுள்ளனர். மேலும், புதுமுக பந்துவீச்சாளர் ஜார்ஜ் லின்டே தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் காயம் ஏற்பட்டதால் பந்துவீச்சாளர் ரபாடா இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார்.

  • #BreakingNews Left-arm spinner, George Linde has received his maiden call-up into the Proteas’ ODI team ahead of their short outbound tour to India from 12-17 March 2020. It will consist of a 3-match ODI series taking place in Dharamsala, Lucknow and Kolkata. #INDvSA #Thread pic.twitter.com/UBo47w70du

    — Cricket South Africa (@OfficialCSA) March 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="

#BreakingNews Left-arm spinner, George Linde has received his maiden call-up into the Proteas’ ODI team ahead of their short outbound tour to India from 12-17 March 2020. It will consist of a 3-match ODI series taking place in Dharamsala, Lucknow and Kolkata. #INDvSA #Thread pic.twitter.com/UBo47w70du

— Cricket South Africa (@OfficialCSA) March 2, 2020 ">

தென் ஆப்பிரிக்க அணி: டி காக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா, வான் டர் டூசேன், டூபிளெசிஸ், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், ஜே.ஜே ஸ்மட்ஸ், அன்டில் ஃபெலுக்வாயோ, லுங்கி இங்கிடி, லுதோ சிபாம்லா, பியூரான் ஹென்ட்ரிக்ஸ், அன்ரிச் நோர்டே, ஜார்ஜ் லின்டே, கேசஷ் மகராஜ், கைல் வெரியன்

இதையும் படிங்க: அந்தோ பரிதாபம்.! எட்டு ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்தியா!

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

du Plessis, van der Dussen
டூபெளிசிஸ் - வான் டர் டூசேன்

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் மார்ச் 12ஆம் தேதி தரம்சாலாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில், உலகக்கோப்பை ஒருநாள் தொடருக்கு பின் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு, முன்னாள் கேப்டன் டூபிளெசிஸ், வான் டர் டூசேன் ஆகியோர் திரும்பியுள்ளனர். மேலும், புதுமுக பந்துவீச்சாளர் ஜார்ஜ் லின்டே தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் காயம் ஏற்பட்டதால் பந்துவீச்சாளர் ரபாடா இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார்.

  • #BreakingNews Left-arm spinner, George Linde has received his maiden call-up into the Proteas’ ODI team ahead of their short outbound tour to India from 12-17 March 2020. It will consist of a 3-match ODI series taking place in Dharamsala, Lucknow and Kolkata. #INDvSA #Thread pic.twitter.com/UBo47w70du

    — Cricket South Africa (@OfficialCSA) March 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தென் ஆப்பிரிக்க அணி: டி காக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா, வான் டர் டூசேன், டூபிளெசிஸ், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், ஜே.ஜே ஸ்மட்ஸ், அன்டில் ஃபெலுக்வாயோ, லுங்கி இங்கிடி, லுதோ சிபாம்லா, பியூரான் ஹென்ட்ரிக்ஸ், அன்ரிச் நோர்டே, ஜார்ஜ் லின்டே, கேசஷ் மகராஜ், கைல் வெரியன்

இதையும் படிங்க: அந்தோ பரிதாபம்.! எட்டு ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.