கரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்துவிதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. பின்னர் வைரசின் தாக்கம் குறைந்ததை அடுத்து பார்வையாளர்களின்றி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் உள்ள தென் ஆப்பிரிக்க அணி, தற்போது 2020, 2021ஆம் ஆண்டுகளில் பங்கேற்கவுள்ள தொடர்கள் குறித்த அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தாண்டு நவம்பர் மாதம், இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று டி20, ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் பங்கேற்கிறது.
அதேபோல் இந்தாண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் என்றும், 2021ஆம் ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
International cricket will resume in South Africa with white-ball series against England, starting 27 November.
— ICC (@ICC) October 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
An action-packed home summer awaits 🇿🇦 https://t.co/E81Dcz0FOv
">International cricket will resume in South Africa with white-ball series against England, starting 27 November.
— ICC (@ICC) October 28, 2020
An action-packed home summer awaits 🇿🇦 https://t.co/E81Dcz0FOvInternational cricket will resume in South Africa with white-ball series against England, starting 27 November.
— ICC (@ICC) October 28, 2020
An action-packed home summer awaits 🇿🇦 https://t.co/E81Dcz0FOv
அதேபோல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து
- நவம்பர் 27, 2020 - முதல் டி20 - கேப்டவுன்
- நவம்பர் 29, 2020 - இரண்டாவது டி20 - பார்ல்
- டிசம்பர் 01, 2020 - மூன்றாவது டி20 - கேப்டவுன்
- டிசம்பர் 4, 2020 - முதல் ஒருநாள் - கேப்டவுன்
- டிசம்பர் 6, 2020 - இரண்டாவது ஒருநாள் - பார்ல்
- டிசம்பர் 9, 2020 - மூன்றாவது ஒருநாள் - கேப்டவுன்
தென் ஆப்பிரிக்கா- இலங்கை
- டிசம்பர் 26-30, 2020 - முதல் டெஸ்ட் - செஞ்சுரியன்
- ஜனவரி 03-07, 2021 - இரண்டாவது டெஸ்ட் - ஜோகன்னஸ்பர்க்
இதையும் படிங்க:வியன்னா ஓபன்: முதல் சுற்றில் அசத்திய ஜோகோவிச், தீம்!