ETV Bharat / sports

முதலிடத்திலிருந்த மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட ஷஃபாலி வர்மா! - மகளிர் டி20 தரவரிசை பட்டியல்

மகளிர் டி20 போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் முதலிடத்திலிருந்த இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Shafali Verma slips to 3rd spot in ICC T20I rankings

author img

By

Published : Mar 9, 2020, 4:20 PM IST

ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவுபெற்ற நிலையில், மகளிர் டி20 போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிந்தபோது, முதலிடத்திலிருந்த இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா, தற்போதைய பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். .

நேற்றைய இறுதி போட்டியில் அவர் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்ததால் தான் தரவரிசை பட்டியலில் சரிவை சந்தித்துள்ளார். அதேசமயம், இந்தியாவுக்கு எதிரான நேற்றைய இறுதி போட்டியில் 79 ரன்கள் உட்பட இந்த தொடரில் மொத்தமாக 259 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி, மூன்றாவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இவர் தொடர் நாயகி விருதையும் வென்றார் என்பது கவனத்துக்குரியது. இந்தப் பட்டியலில் நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ், கேப்டன் சோபி டிபைன் ஆகியோர் முறையே இரண்டாவது, நான்காவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றனர். இதேபோல, நேற்றைய போட்டியில் 75 ரன்கள் அடித்து ஆட்டநாயகி விருதை வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலே ஏழாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த தொடரில் 49 ரன்கள் மட்டுமே அடித்திருந்ததால் ஸ்மிருதி மந்தனா ஆறாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்துக்கு சரிவடைந்துள்ளார்.

மகளிர் டி20 போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியல்

  1. பெத் மூனி (ஆஸ்திரேலியா) - 762 புள்ளிகள்
  2. சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 750 புள்ளிகள்
  3. ஷஃபாலி வர்மா (இந்தியா) - 744 புள்ளிகள்
  4. சோபி டிவைன் (நியூசிலாந்து) - 742 புள்ளிகள்
  5. அலிசா ஹீலே (ஆஸ்திரேலியா) - 714 புள்ளிகள்
  6. மெக் லானிங் (ஆஸ்திரேலியா) - 712 புள்ளிகள்
  7. ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 694 புள்ளிகள்
  8. ஸ்டஃபைன் டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்) - 661 புள்ளிகள்
  9. ஜெமிமா ரோட்ரிக்ஸ் (இந்தியா) - 643 புள்ளிகள்
  10. நாட் ஸிவர் (இங்கிலாந்து) - 636 புள்ளிகள்

இதையும் படிங்க: கப் அடிக்கலனா என்னா... நீங்க தடையைத் தாண்டி விளையாடுனதே பெருசுதான் - கம்பீர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.