ETV Bharat / sports

இந்தியாவிலும் ரன் வேட்டையைத் தொடரும் ஜோ ரூட்! - இரட்டை சதம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் விளாசியதன் மூலம், இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்களை விளாசிய மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்தார்.

Root is in love with Indian pitches: 842 runs in 7 Tests

author img

By

Published : Feb 10, 2021, 4:46 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தற்சமயம் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணிக்கெதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இந்திய அணிக்கெதிராக இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரூட், 1,679 ரன்களை குவித்துள்ளார். இதில் ஐந்து சதங்களும், ஒரு இரட்டை சதமும் அடங்கும். அதிலும் அவர் இந்தியாவில் விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் 842 ரன்களை குவித்துள்ளார்.

மேலும் இந்தாண்டில் ஜோ ரூட் பங்கேற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் 218,11,186,01 (இலங்கை அணியுடன்) 228,40 (இந்தியாவுடன்) என மொத்தம் 684 ரன்களையும் கடந்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் ஹசாரே கோப்பை: மும்பை அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.