இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 387 ரன்களை எடுத்தது.
இதில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள ரோஹித் சர்மா - கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தினர். இந்தப் போட்டியில் இவர்கள் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் முறையில் 227 ரன்களை குவித்திருந்தனர்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச முதல் விக்கெட் பாட்னர்ஷிப் என்ற 17 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளனர். இதற்கு முன்னதாக இந்திய அணியின் அதிரடி மன்னர்கள் சேவாக் - கங்குலி இணை 2002ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் போட்டியில் 196 ரன்களை எடுத்ததே, இதுநாள் வரை சாதனையாக இருந்தது.
மேலும் இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் தொடரில் தனது 28ஆவது சதத்தைப் பதிவு செய்தது மட்டுமில்லாமல், இந்த ஆண்டு மட்டும் 7 சதங்களை அடித்து, ஒரு ஆண்டில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்தினார்.
-
💯
— BCCI (@BCCI) December 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hitman gets to this 28th ODI Century. His 7th ODI ton of 2019. Top Man 🙌🙌#INDvWI pic.twitter.com/vxJkExGywF
">💯
— BCCI (@BCCI) December 18, 2019
Hitman gets to this 28th ODI Century. His 7th ODI ton of 2019. Top Man 🙌🙌#INDvWI pic.twitter.com/vxJkExGywF💯
— BCCI (@BCCI) December 18, 2019
Hitman gets to this 28th ODI Century. His 7th ODI ton of 2019. Top Man 🙌🙌#INDvWI pic.twitter.com/vxJkExGywF
நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியது.
இதையும் படிங்க:400ஆவது போட்டியில் களமிறங்கிய கோலி; சோதனையில் முடிந்த சாதனை!