ETV Bharat / sports

ஐசிசி டி20 தரவரிசை: டாப் 3-யில் இடம்பிடித்த ராகுல்! - விராட் கோலி

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் அரைசதம் அடித்தன் மூலம் இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல். ராகுல் ஐசிசியின் டி20 தரவரிசைப் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறினார்.

Rahul breaks into top 3 of T20I rankings, Kohli moves to no. 8

author img

By

Published : Dec 9, 2020, 7:42 PM IST

அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் கே.எல். ராகுல் அரைசதமடித்து அசத்தினார். அதேபோல் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டில் கேப்டன் விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தினார் .

இந்நிலையில் ஐசிசி இன்று (டிச.09) வெளியிட்ட சர்வதேச டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் கே.எல். ராகுல் மூன்றாமிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எட்டாவது இடத்திற்கு முன்னேறினார்.

இப்பாட்டியலில் இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் முதலிடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச் நான்காவது இடத்திலும், கிளென் மேக்ஸ்வல் ஏழாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

  • 🇦🇺 Adam Zampa enters the top 5️⃣
    🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 Chris Jordan gains two places to join the top 🔟
    ⬆️ Gains for 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 Adil Rashid, 🇵🇰 Imad Wasim and 🌴 Sheldon Cottrell 👏

    There is plenty of movement in the latest @MRFWorldwide ICC Men's T20I Bowling Rankings 👀

    👉 https://t.co/H7CnAiw0YT pic.twitter.com/Fpb1yVlRfd

    — ICC (@ICC) December 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் முதலிடத்திலும், முஜீப் உர் ரஹ்மான் இரண்டமிடத்தையும், இங்கிலாந்தின் ஆதில் ரஷித் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 11ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க:14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தெ.ஆ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.