ETV Bharat / sports

#TNPL: அரையிறுதிக்கு தகுதி பெற்ற மதுரை பாந்தர்ஸ்

author img

By

Published : Aug 9, 2019, 4:00 AM IST

திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் காரைக்குடி காளையை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மதுரை பாந்தர்ஸ் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

TNPL

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 26ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் மோதின. திருநெல்வேலி இந்தியன் சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற காரைக்குடி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய காரைக்குடி அணி நிதானமாக தொடக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் கேப்டன் அனிருதா ஸ்ரீகாந்த் 13 ரன்னில் முதல் ஆளாக வெளியேறினார்.

இதைதொடர்ந்து மதுரை அணியின் பந்துவீச்சாளர்களின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் கரைக்குடி அணியினர் தொடர்ந்து அனைத்து வீரர்களும் வரிசையாக நடையைக் கட்டத் தொடங்கினர். இதனால் காரைக்குடி அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கணேஷ், ஆதித்யா தலா 14 ரன்களை குவித்தனர். மதுரை பந்துவீச்சில் ரஹில் ஷா, கிரண் ஆகாஷ் தலா மூன்று விக்கெட்டையும், செல்வகுமரன் 2, மிதுன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் களமிறங்கிய மதுரை வீரர்கள் அருண் கார்த்திக் 0, நிலேஸ் சுப்ரமணியன் 0 ஆகியோர் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பின்னர் சிறிது நேரம் தாக்குப்பிடித்த சரத் ராஜ் 14, ஜெகதீசன் கவுசிக் 5, எம்.எஸ். புரோமோத் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க மதுரை அணி 40 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் பொறுப்பாக ஆடிய மதுரை அணியின் கேப்டன் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் வரிசை வீரரான செல்வகுமரன் 21 ரன்கள் எடுத்திருந்த போது துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட்டானார். அவருக்கு அடுத்து வந்த அபிஷேக் தன்வாரும், 5 ரன்னில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பதற்றம் பற்றிக்கொண்டது.

TNPL
பவுலிங், பேட்டிங் இரண்டிலும் அசத்திய மதுரை வீரர் கிரண் ஆகாஷ்

வெற்றிக்கு குறைவான ரன்களே தேவை என்றபோதும், விக்கெட்டுகள் சரிந்ததால் மதுரை அணி தடுமாறியது. ஆனால் சாமர்த்தியமாக செயல்பட்ட கிரண் ஆகாஷ் மதுரை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியில் 18.1 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்த மதுரை பாந்தர்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் காரைக்குடி அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியதோடு அரையிறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டிக்கு பின் அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த நடப்பு சாம்பியனான மதுரை அணி அரையிறுதிக்கு செல்லுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதை உடைக்கும் விதமாக அடுத்து நடைபெற்ற நான்கு போட்டிகளிலும மதுரை பாந்தர்ஸ் அணி தொடர் வெற்றி பெற்று அசத்தியது.

Intro:Body:

tnpl

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.