இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்களும், பொதுமக்களும் போராடிவருகின்றனர். ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, காவல் துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின்போது, மாணவர்கள் பலரும் சேர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பனியன்களை அணிந்து போராடியுள்ளனர். அந்த பனியன்களில், '' No NRC, NO NPR, NO CAA'' எனப் எழுதப்பட்டிருந்தது.

தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியா காட்டுத்தீ - 43,000 டாலர் பரிசுத் தொகையை நிவாரணம் அளித்த செரீனா