ETV Bharat / sports

பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசிலாந்து!

author img

By

Published : Jan 6, 2021, 3:19 PM IST

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

New Zealand for the first time ranked no. 1 in Tests

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றுவரும் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு அபித் அலி - அசார் அலி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அபித் அலி 26 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஹாரிஸ் சோஹைல், ஆலம், ரிஸ்வான் ஆகியோர் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.

அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையிலும், ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது. மேலும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்திருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

  • 🇳🇿 NEW ZEALAND ARE NO.1️⃣🎉

    Victory over Pakistan has sent Kane Williamson's side to the 🔝 of the @MRFWorldwide ICC Test Team Rankings!

    They have achieved the feat for the first time in rankings history 👏 pic.twitter.com/8lKm6HebtO

    — ICC (@ICC) January 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக அணியை வழிநடத்திவரும் கேப்டன் கேன் வில்லியம்சனிற்குப் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இதையும் படிங்க:ஐஎஸ்எல்: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய மும்பை சிட்டி எஃப்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.