கடந்த ஜூலை மாதம் அரசியல் தலையீடு காரணமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியை ஐசிசி தடை செய்தது. இதன் காரணமாக 2020இல் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலைக்கு ஜிம்பாப்வே அணி தள்ளப்பட்டது.
ஆனால் ஜிம்பாப்வே அணிக்கு விதிக்கப்பட்ட தடையினால் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நைஜீரியா ஆண்கள் அணியும், நமீபியா பெண்கள் அணியும் விளையாடவுள்ளன. இவ்விரு அணிகளும் 2020இல் நடக்கவுள்ள உலகக்கோப்பை டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
ஜிம்பாப்வே அணியுடன் நடைபெறவிருந்த ஆண்கள் பிரிவுக்கான 'ஆப்பிரிக்கா தகுதிச்சுற்று' இறுதி ஆட்டத்தில் நைஜீரியா அணி போட்டியின்றி வெற்றிபெற்றது.
இதனால் கென்யா, நமீபியாவுடன் இணைந்து உலக தகுதிச் சுற்றில் மூன்றாவது ஆப்பிரிக்க அணியாக நைஜீரியா உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.