ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அவைத் தவிர்த்து எஞ்சியுள்ள ஆறு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் நேற்று தொடங்கியது.
இரண்டு பிரிவுகளின் கீழ் நடைபெறும் இந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஹாங்காங், பெர்முடா, கென்யா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் முதல் நாளான நேற்று நான்கு போட்டிகள் நடைபெற்றன. அதில் ஒரு போட்டியில் அயர்லாந்து அணி ஹாங்காங் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அதைத் தொடர்ந்து இன்று மாலை நடைபெறும் போட்டியில் அயர்லாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. அபுதாபி ஷேக் சையத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக அயர்லாந்து வீரர்கள் அங்கு சென்றனர்.
அப்போது அவர்கள் ரக்பி பந்தை வைத்து மைதானத்தில் விளையாடினார். இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட ஐசிசி உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்காக வந்துள்ள அயர்லாந்து வீரர்கள் உலகக்கோப்பை ரக்பி தொடரில் அயர்லாந்து அணி இன்று நடைபெறும் காலிறுதிச்சுற்றில் நியூசிலாந்தை எதிர்கொள்வதால் அதில் ஒரு கண்ணை வைத்துள்ளனர் என்று கேலியாக பதிவிட்டது.
-
Their mission is to qualify for the @T20WorldCup, but the men from the emerald isle will have one eye on the @rugbyworldcup with @IrishRugby facing New Zealand in today's quarter-final ☘️👀 pic.twitter.com/iSKSA4j3S5
— ICC (@ICC) October 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Their mission is to qualify for the @T20WorldCup, but the men from the emerald isle will have one eye on the @rugbyworldcup with @IrishRugby facing New Zealand in today's quarter-final ☘️👀 pic.twitter.com/iSKSA4j3S5
— ICC (@ICC) October 19, 2019Their mission is to qualify for the @T20WorldCup, but the men from the emerald isle will have one eye on the @rugbyworldcup with @IrishRugby facing New Zealand in today's quarter-final ☘️👀 pic.twitter.com/iSKSA4j3S5
— ICC (@ICC) October 19, 2019
கிரிக்கெட்டைப் போன்றே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரக்பி உலகக்கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. ஜப்பானில் நடைபெற்றுவரும் நடப்பு உலகக்கோப்பை ரக்பி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் அயர்லாந்து அணி நடப்பு சாம்பியனான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ரக்பி உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி அதிகபட்சமாக மூன்று முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.