இந்தியா, தென்ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவெடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தானா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஷாபாலி வர்மா - ரிச்சா கோஷ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில், அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷபாலி வர்மா, 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 47 ரன்களையும், ரிச்சா கோஷ் 44 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு லிசெல் லீ, லாரா வால்வார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. தொடர்ந்து, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
இருப்பினும் இன்னிங்ஸின் கடைசி பந்துவரைச் சென்ற இப்போட்டியில் தென்ஆப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீத்தியது. அந்த அணியில் அதிகபட்சமாக லிசெல் லீ 70 ரன்களையும், லாரா வால்வார்ட் 53 ரன்களையும் சேர்த்தனர்.
-
South Africa win a last-ball thriller by six wickets thanks to Laura Wolvaardt's unbeaten 53*
— ICC (@ICC) March 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
They clinch the #INDvSA series 2-0, their first T20I series win over India 👏
Scorecard: https://t.co/Du111jyKpU pic.twitter.com/wSRU8X8WWG
">South Africa win a last-ball thriller by six wickets thanks to Laura Wolvaardt's unbeaten 53*
— ICC (@ICC) March 21, 2021
They clinch the #INDvSA series 2-0, their first T20I series win over India 👏
Scorecard: https://t.co/Du111jyKpU pic.twitter.com/wSRU8X8WWGSouth Africa win a last-ball thriller by six wickets thanks to Laura Wolvaardt's unbeaten 53*
— ICC (@ICC) March 21, 2021
They clinch the #INDvSA series 2-0, their first T20I series win over India 👏
Scorecard: https://t.co/Du111jyKpU pic.twitter.com/wSRU8X8WWG
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென்ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய லாரா வால்வார்ட் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.