ETV Bharat / sports

இஷாந்த் சர்மாவின் காயத்திற்கு யார் பொறுப்பு?

இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதற்கு தேசிய கிரிக்கெட் அகாதமியின் அலட்சியம்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

Ishant Sharma's ankle injury put NCA physio under scanner

author img

By

Published : Mar 1, 2020, 1:29 PM IST

Updated : Mar 1, 2020, 1:43 PM IST

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதன்மை பந்துவீச்சாளராகத் திகழும் இஷாந்த் சர்மாவுக்கு கடந்த ஜனவரி மாதம் ரஞ்சி தொடரின்போது கணுக்காளில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திலிருந்து மீண்டுவர அவருக்கு ஆறு வாரங்களாகும் என டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் தெரிவித்திருந்தார்.

இதனால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து அவர் விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெங்களூருவில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சிகிச்சைப் பெற்று பூரண குணமான இஷாந்த் சர்மா, உடற்தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று, இந்திய அணியில் இடம்பிடித்தார்.

இதைத்தொடர்ந்து, வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இருப்பினும், இந்திய அணிக்கு இப்போட்டியில் அமைந்த சாதகமான விஷயமே இஷாந்த் சர்மா, ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதுதான்.

Ishant Sharma
இஷாந்த் சர்மா

இந்நிலையில், இஷாந்த் சர்மாவுக்கு மீண்டும் கணுக்காளில் காயம் ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிராக கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். இதனால், அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார்.

காயத்திலிருந்து மீண்டுவந்த அவர், ஒரேயொரு போட்டியில் விளையாடிவிட்டு மீண்டும் காயத்தால் வெளியேறியிருப்பது, என்.சி.ஏ மீதும், அவருக்கு சிகிச்சையளித்த ஆசிஷ் கவுசிக் மீதும் கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கையில், "ரஞ்சி போட்டியில் காயமடைந்தபோது இஷாந்த் சர்மாவுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்த டெல்லி பிசியோ, அவர் இந்த காயத்திலிருந்து குணமாக ஆறு வாரங்களாகும் என தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற சூழலில், அவர் எப்படி மூன்றே வாரங்களில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பலாம் என்று என்.சி.ஏவும், பிசியோ ஆசிஷ் கவுசிக்கும் முடிவு செய்தனர்" என்ற கேள்வியை முன்வைத்துள்ளது.

முன்னதாக, காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியதற்கு இஷாந்த் சர்மா, பிசியோ ஆசிஷ் கவுசிக்கிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நியூசிலாந்திடம் கம்பேக் தந்த இந்தியா!

Last Updated : Mar 1, 2020, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.