ETV Bharat / sports

வெறித்தனம் காட்டிய ரோஹித்: சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி! - சூப்பர் ஓவரில் த்ரில் இந்தியா வெற்றி

ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றிபெற்று, முதல்முறையாக தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

india-won-in-an-super-over-and-won-the-series-by-3-0

author img

By

Published : Jan 29, 2020, 4:47 PM IST

Updated : Jan 29, 2020, 4:57 PM IST

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்றுள்ள மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களாக கப்தில் - முன்ரோ களமிறங்கி அதிரடியாக ஆடினர். இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 47 ரன்கள் சேர்த்த நிலையில், கப்தில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரர் காலின் முன்ரோ 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 7 ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்தது.

ஜடேஜா
ஜடேஜா

இதையடுத்து கேப்டன் வில்லியம்சனுடன் நைட் வாட்ச்மேனான சாண்ட்னர் களமிறங்கினார். இதையடுத்து வில்லியம்சன் அதிரடியாக ஆட, 10 ஓவர்களில் நியூசி. 79 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சாஹல் வீசிய பந்தில் சாண்ட்னர் ஆட்டமிழக்க, ஆட்டம் பரபரப்பானது.

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் வில்லியம்சன் அதிரடியால் 15 ஓவர்களில் நியூசி. 128 ரன்கள் எடுத்தது. இதனிடையே கேப்டன் வில்லியம்சன் அரைசதம் கடந்தார்.

பின்னர் 16ஆவது ஓவரில் கிராண்ட்ஹோம் 5 ரன்களில் ஆட்டமிழக்க, 17ஆவது ஓவரை வீசிய பும்ராவின் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்து வில்லியம்சன் அசத்தினார்.

95 ரன்கள் எடுத்த வில்லியம்சன்
95 ரன்கள் எடுத்த வில்லியம்சன்

இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 29 ரன்கள் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. 18ஆவது ஓவரில் சாஹல் 9 ரன்கள் விட்டுக்கொடுக்க, 19ஆவது ஓவரை வீசுவதற்கு பும்ரா அழைக்கப்பட்டார். இதில் இரண்டு பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் இறுதி ஓவரில் நியூசிலாந்து வெற்றிபெறுவதற்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை வீசுவதற்கு முகமது ஷமி அழைக்கப்பட, முதல் பந்திலேயே ராஸ் டெய்லர் சிக்சர் விளாச, 2ஆவது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் வில்லியம்சன் 95 ரன்களில் ஆட்டமிழக்க, நான்காவது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் இரண்டு பந்துகளுக்கு 2 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலை வந்தது.

5ஆவது பந்தில் 1 ரன் எடுக்க, கடைசிப் பந்தில் ராஸ் டெய்லர் ஆட்டமிழந்ததால் ஆட்டம் டிரா ஆனது. இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

கப்தில்
கப்தில்

இதனால் ஆட்டத்தின் முடிவு சூப்பர் ஓவர் மூலம் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் நியூசி. பேட்டிங் செய்ய, பும்ரா பந்துவீசினார். சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி சார்பாக கப்தில் - வில்லியம்சன் இணை விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்தது. இதனால் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றிபெற 18 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நியூசிலாந்து அணியில் சூப்பர் ஓவரை வீசுவதற்கு சவூதி அழைக்கப்பட, இந்திய அணியில் ரோஹித் சர்மா - கே.எல். ராகுல் களமிறங்கினர். இதில் முதல் நான்கு பந்துகளில் இந்திய அணி 8 ரன்களை மட்டுமே எடுக்க கடைசி இரண்டு பந்துகளையும் ரோஹித் சர்மா சிக்சர்களாய் மாற்றி இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

வெறித்தனம் காட்டிய ரோஹித்
வெறித்தனம் காட்டிய ரோஹித்

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் 3-0 என்று தொடரைக் கைப்பற்றியது. இதுவரை இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றாத வரலாற்றை, முதல்முறையாக கோலி தலைமையிலான இந்திய அணி மாற்றியுள்ளது.

இதையும் படிங்க: ஒரே போட்டியில் 48 சிக்சர், 70 பவுண்டரி... சந்தேகத்தை எழுப்பிய வங்கதேச உள்ளூர் கிரிக்கெட்

Intro:Body:

India Won by 5 runs

Conclusion:
Last Updated : Jan 29, 2020, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.