இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபிஞ்சு இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
இதையடுத்து இந்திய அணி சிறப்பாக ஆடியது. இந்திய பேட்ஸ்மேன்களான தவான், கோலி, ரோஹித், ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடினர். இதனிடையே இந்திய வீரர் ஜடேஜ ரன்கள் ஓடுகையில், பிட்ச்களில் ஓடியுள்ளார். அப்போது நடுவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதையடுத்தும் ரன்கள் ஓடும்போது பிட்ச்களில் ஓடியதால் இந்திய அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கின் போது 5 ரன் என்ற தொடக்கத்தோடு களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த 5 ரன்கள் அபராதம் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் முடிவடைந்தபோது அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களும் ஜடேஜாவும் நிம்மதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஓரினச்சேர்க்கையாளர்' கமெண்ட்; ஸ்டோய்னிஸுக்கு அபராதம் விதித்த ஆஸ்திரேலியா