இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தித் தொடரைக் கைப்பற்றியது.
அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிக்களுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 15ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறவேண்டிய சூழ்நிலைக்கு இந்திய அணித் தள்ளப்பட்டுள்ளது. மேலும், இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தொடர்ச்சியாக ஒன்பது தொடரைக் கைப்பற்றியுள்ளது, இந்திய அணி. அதனால் பத்தாவது தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி இன்றையப் போட்டியில் களமிறங்கவுள்ளது.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2006ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்கு எதிராக எந்தவொரு ஒருநாள் தொடரையும் வென்றதில்லை என்ற மோசமான சாதனையை வைத்துள்ளது. கிட்டத்தட்ட 13ஆண்டுகளுக்கும் மேலாக தொடரை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்று அதனை சாத்தியப்படுத்தும் முனைப்பில் களமிறங்கவுள்ளது.
ஆனால், இந்திய அணி கடந்த 15 ஆண்டுகளாக உள்நாட்டில் தொடர்ந்து இரு ஒருநாள் தொடர்களை இழந்ததும் இல்லை, தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததும் இல்லை. கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது.
-
Virat Kohli's record in Vizag ⬇️
— ICC (@ICC) December 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
ODIs ➞ 5
Runs ➞ 556
Avg ➞ 139
How will the 🇮🇳 captain fare in the second #INDvWI ODI today? pic.twitter.com/GeYVW6AR8d
">Virat Kohli's record in Vizag ⬇️
— ICC (@ICC) December 18, 2019
ODIs ➞ 5
Runs ➞ 556
Avg ➞ 139
How will the 🇮🇳 captain fare in the second #INDvWI ODI today? pic.twitter.com/GeYVW6AR8dVirat Kohli's record in Vizag ⬇️
— ICC (@ICC) December 18, 2019
ODIs ➞ 5
Runs ➞ 556
Avg ➞ 139
How will the 🇮🇳 captain fare in the second #INDvWI ODI today? pic.twitter.com/GeYVW6AR8d
மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மூன்று போட்டிகளில் இந்திய அணித்தோல்வியை தழுவியது. அதேசமயம் சென்னையில் நடைபெற்ற போட்டியிலும் தோல்வியடைந்துள்ளதால், இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இன்றையப் போட்டியில் இந்திய அணித் தோல்வியை தழுவும் பட்சத்தில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வி மற்றும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு ஒரு நாள் தொடரை இழந்தது என்ற மோசமான சாதனையைப் படைக்கும்.
அணியின் பலமும் - பலவீனங்களும்;
இந்திய அணியின் டாப் ஆர்டர்களில் ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி ஆகியோர் இன்று அசத்தும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. நடுவரிசை வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவதால் அவர்கள் அணியின் இறுதிக்கு உறுதுணையாக இருப்பர்.
ஆனால், இந்திய அணியின் ஃபினிஷிங் ரோல் தான் சிறிது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மயங்க் அகர்வால், மனீஷ் பாண்டே ஆகியோர் கூடுதல் பேட்ஸ்மேனாக உள்ள நிலையில் இன்றைய போட்டியில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
ஏனெனில் ஆல் ரவுண்டரான ஷிவம் தூபே, ஜடேஜா ஆகியோரின் பந்து வீச்சும் பேட்டிங்கும் கடந்த ஆட்டத்தில் சொதப்பியதால் அவர்களில் யாரேனும் ஒருவர் தான் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக் கூடும். மேலும் தூபே கடந்த ஆட்டத்தில் எட்டு ஓவர்களை மட்டும் வீசி 60க்கு மேற்பட்ட ரன்களை வாரி வழங்கியுள்ளாதால், இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகமே என ரசிகர்கள் கருதுகின்றனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் முகமது ஷமி, தீபக் சஹார், குல்தீப் யாதவ் ரன்களை கட்டுப்படுத்தி எதிரணிக்கு நெருக்கடியை கொடுத்து வருகின்றனர். ஆனால், கூடுதல் பந்துவீச்சாளர் தேவைப்படும் காரணத்தால் இன்றைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் அல்லது வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் அணியில் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரையில் சாய் ஹோப், ஹெட்மையர், பூரான், பொல்லார்ட் என அதிரடி பட்டாளங்கள் அணிக்கு பலமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றது. மேலும் அந்த அணியின் தொடக்க வீரர் லூயிஸிம் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில், கடந்த ஆட்டத்தில் அணியின் கேப்டன் பொல்லார்ட் ஏழு பந்து வீச்சாளர்களை உபயோகித்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்தார். இதனால் பேட்டிங், பவுலிங் என இரு பிரிவிலும் அந்த அணி மாஸ் காட்டியுள்ளது.
ஆடுகளம்:
இன்று நடைபெறும் போட்டியானது விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சளர்களின் நிலை கொஞ்சம் சந்தேகம் தான். மேலும் இந்த மைதானத்தின் சராசரி ரன் விகிதமே 275. இதனால் இன்றையப் போட்டியில் ரசிகர்களின் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது.
அதேபோல் கடந்த ஆண்டு இந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 321 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதனை வெஸ்ட் இண்டீஸ் அணி 321 ரன்களை அடித்து சமன் செய்திருப்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.
உத்தேச அணி விபரம்:
இந்தியா: விராட் கோலி(கே), லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஷார்துல் தாகூர் / யுஸ்வேந்திர சாஹல்
வெஸ்ட் இண்டீஸ்: கீரோன் பொல்லார்ட் (கே), ஜேசன் ஹோல்டர், சுனில் ஆம்ப்ரிஸ்/ எவன் லூவிஸ், ஷெல்டன் கோட்ரெல், நிக்கோலஸ் பூரான், ஷிம்ரான் ஹெட்மியர், ஷாய் ஹோப், கீமோ பால், அல்சாரி ஜோசப், ரோஸ்டன் சேஸ், ஹேடன் வால்ஷ்
இதையும் படிங்க: டிவில்லியர்ஸை குறித்த பேச்சுவார்த்தை மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது - டூ பிளஸ்ஸிஸ்