ETV Bharat / sports

'இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவோம்' - சில்வர்வுட்

இந்திய அணிக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றும் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.

IND vs ENG: Confidence will go through the roof if we beat hosts, says Silverwood

author img

By

Published : Jan 27, 2021, 9:03 AM IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இருநாட்டு அணி வீரர்களும் இன்று (ஜனவரி 27) சென்னைக்கு வருகைதரவுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சில்வர்வுட், "சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரிலிருந்து எங்களுக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. அது என்னவென்றால் இந்திய அணியை வெல்வது கடினமான ஒன்று. இது நிச்சயம் எங்களுக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும். எங்களால் அவர்களை வீழ்த்த முடியுமா? என்று கேட்டால் என்னுடைய பதில் நிச்சயம் எங்களால் முடியும். ஆனலும் இத்தொடர் முகவும் கடினமானது.

ஏனெனில் இந்திய அணியில் திறன் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். அதனால் அவர்களை வீழ்த்துவதற்கு பெரும் முயற்சிகள் தேவை. இத்தொடரில் எங்களது முழு திறனையும் பயன்படுத்தி நாங்கள் அவர்களை வீழ்த்துவோம்" என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கே), ஜோஃப்ரா ஆர்ச்சர், மோயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஸாக் கிரௌலி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜேக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

இதையும் படிங்க:சயீத் முஷ்டாக் அலி: அரையிறுதிச் சுற்றில் தமிழ்நாடு, பஞ்சாப் அணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.