பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளராக பணிபுரிபவர் நயீம் உல் ஹக். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சச்சினின் இளம்வயது புகைப்படத்தை பகிர்ந்து அதை 1969-இல் இம்ரான் கான் என குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் இந்தப் புகைப்படத்தை பார்த்ததும், கிடைத்தது கண்டெண்ட் என நயீம் உல் ஹக்கை கலாய்க்க கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் நயீம் உல் ஹக் இதற்கெல்லாம் அஞ்சுவதாக இல்லை. தவறாக பதிவிட்ட அந்த புகைப்படத்தை அகற்றும் எண்ணமும் இல்லாமல் இருக்கிறார்.