2020ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை ஸ்காட்லந்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
அதில் ’குருப் ஏ’ மற்றும் ’குருப் பி’ என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் வீதம் 8 அணிகள் ’நாக் அவுட்’ முறையில் போட்டியிடவுள்ளன.
-
The schedule for the ICC Women's @T20WorldCup Qualifier 2019 in Scotland has been announced 👇https://t.co/beZ6FD6VZf
— ICC (@ICC) August 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The schedule for the ICC Women's @T20WorldCup Qualifier 2019 in Scotland has been announced 👇https://t.co/beZ6FD6VZf
— ICC (@ICC) August 8, 2019The schedule for the ICC Women's @T20WorldCup Qualifier 2019 in Scotland has been announced 👇https://t.co/beZ6FD6VZf
— ICC (@ICC) August 8, 2019
’குருப் ஏ’ பிரிவில் பங்களாதேஷ், ஸ்காட்லாந்து, பபுவா நியூ கையான மற்றும் அமெரிக்கா பங்கேற்கின்றன. ’குருப் பி’ பிரிவில் ஐயர்லாந்து, தாய்லாந்து, நமிபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பங்கேற்கின்றன.
இந்த தகுதி சுற்றுக்கான அரையிறுதிப் போட்டிகள் செப்டம்பர் 5ஆம் தேதியும், இறுதிப் போட்டி செப்டம்பர் 7ஆம் தேதியும் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.