ETV Bharat / sports

'எனக்குக் கரோனா தொற்று இருப்பதாக நினைத்தேன்' - ஜாக் லீச் - இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச், நடந்துமுடிந்த தென் ஆப்பிரிக்க தொடரின்போது தனக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதாக எண்ணி அச்சமடைந்ததாகக் கூறியுள்ளார்.

i-thought-i-had-coronavirus-says-england-spinner-jack-leach

author img

By

Published : Jun 28, 2020, 5:50 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பால் மார்ச் மாதத்திற்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், வரும் ஜூலை 8ஆம் தேதி இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இந்தத் தொடர் 2019-2021ஆம் ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாகும். மே, ஜூன் மாதத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய இத்தொடர், கரோனா வைரஸ் காரணமாக ஜூலையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஜாக் லீச், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ”தென் ஆப்பிரிக்க தொடரின்போது எனக்குக் காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கின. ஒரு சமயத்தில் எனக்குக் கரோனா வந்துள்ளது என்ற முடிவுக்கே நான் சென்றுவிட்டேன். ஏனெனில், அங்கு நான் கொண்டிருந்த அந்த அறிகுறிகள் உங்களிடம் தற்போது இருந்திருந்தால், 'இது நிச்சயமாக கரோனா வைரஸ்தான்' என்ற நிலைக்கு வந்துருப்பீர்கள்.

இதனால் நான் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். அதன்பின் என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள், நான் கிரோன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று கூறினர். மேலும், இது கரோனா வைரசால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறினர். ஆனால், தற்போது நான் எந்தப் பிரச்னையுமின்றி நலமுடன் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.