ETV Bharat / sports

‘ஆஸ்திரேலிய தொடரை எதிர்நோக்கியுள்ளேன்’ - சுப்மன் கில் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில், தனக்குத் தனிப்பட்ட இலக்குகள் இல்லை என்றாலும், ஆஸ்திரேலிய தொடரை எதிர்நோக்கி காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

I have not really set any personal goals, but looking forward to Australia tour: Gill

author img

By

Published : Nov 23, 2020, 9:25 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 27ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்திய ஒருநாள், டெஸ்ட் அணிகளில் தேர்வுசெய்யப்பட்டுள்ள இளம் வீரர் சுப்பன் கில்லின் நேர்காணலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.

அதில் பேசிய சுப்மன் கில், "நான் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் இது என்னுடைய முதல் பயணம். இளம் வீரராக வளர்ந்துவரும் நான், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டிகளை எப்போதும் பார்த்துள்ளேன். ஆனால் இப்போது நான் அங்கு சென்று விளையாடவுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவொரு இலக்குகளும் கிடையாது. ஆனால் ஆஸ்திரேலிய தொடரை நான் எதிர்நோக்கியுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடிய சுப்மன் கில், 14 போட்டிகளில் விளையாடி 440 ரன்களை குவித்துள்ளார். இதற்கு முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்த ரோஹித் சர்மாவின் மாற்று வீரராக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இபிஎல் 2020: லெய்செஸ்டரை பந்தாடியது லிவர்பூல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.