கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சர்வதேச சுகாதார அமைப்பு, பொதுமக்களைத் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனையடுத்து விளையாட்டு வீரர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில், தனிமைப்படுத்துதல் விளையாட்டு (The Isolation Game) என்ற பெயரில், வருடத்தின் 12 மாதங்களை குறிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு கிரிக்கெட் வீரரின் பெயரைப் பதிவிட்டு, இதில் யார் உங்களுடைய தனிமைப்படுத்திகொள்வதற்குத் துணையாக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என ரசிகர்களிடத்தில் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் (Herschelle Gibbs), நான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன், உடற்பயிற்சி நிலையத்தில் தனிமைப்படுத்தபடுவதை விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
-
In quarantine , me and @imVkohli going toe to toe in the gym💪 https://t.co/FZ0mvB3OMp
— Herschelle Gibbs (@hershybru) March 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In quarantine , me and @imVkohli going toe to toe in the gym💪 https://t.co/FZ0mvB3OMp
— Herschelle Gibbs (@hershybru) March 22, 2020In quarantine , me and @imVkohli going toe to toe in the gym💪 https://t.co/FZ0mvB3OMp
— Herschelle Gibbs (@hershybru) March 22, 2020
மேலும் விராட் கோலி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய போது, கிப்ஸை தனக்கு மிகவும் பிடித்த வீரர் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் கிப்ஸ் தற்போது கோலியுடன் நேரம் செலவிட விரும்புவதாக தெரிவித்துள்ளது, ரசிகர்களின் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:'இந்தாண்டு ஒலிம்பிக் நடந்தால் பங்கேற்க போவதில்லை' - கனடா