ETV Bharat / sports

'ஃபக்கர் தனது ஒரு ஆட்டத்தின் மூலம் புகழின் உச்சியடைந்தார்'- இன்சமாம்-உல்-ஹக்

author img

By

Published : Jun 26, 2020, 9:02 PM IST

2017 சாம்பியன்ஸ் கோப்பையின் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தின் போது ஃபக்கர் ஜமான் சிறப்பாக விளையாடி, பாகிஸ்தானுக்கு வெற்றியைப் பெற்று தந்ததாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்தார்.

fakhars-knock-against-sa-turning-point-for-pak-in-2017-ct-says-inzamam-ul-haq

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் ஜூன் 28ஆம் தேதி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் அடங்கிய டி20, டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் 28 வீரர்கள் கொண்ட அணிப் பட்டியலையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ளப்பேட்டி ஒன்றில், 'பாகிஸ்தான் அணியில் ஃபக்கர் ஜமான் ஒரு மிகச்சிறந்த வீரர் என்றும், அவர் ஒரே போட்டியில் தனது திறனை நிரூபித்துக் காட்டியவர் என்றும்' புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய இன்சமாம்-உல்-ஹக், "சில நேரங்களில், ஒரே ஒரு இன்னிங்ஸ் உங்களைத் தூக்கிவிடவும் செய்யும். அதேசமயம் இறக்கிவிடவும் செய்யும். அதுபோல, கடந்த 2017ஆம் ஆண்டு, சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரின் லீக் ஆட்டத்தின் போது, ஃபக்கர் ஜமான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெறும் 37 (31) ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், அந்தப் போட்டியில் அவர் வெளிப்படுத்திய ஆக்ரோஷம் அணியின் மன உறுதியை முற்றிலுமாக மாற்றியது. அதன் காரணமாகவே, எங்களால் கோப்பையையும் கைப்பற்ற முடிந்தது" என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கெதிராக தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள ஃபக்கர் ஜமான், கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில், இதுவரை 10 வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.