ETV Bharat / sports

#EXCLUSIVE: யு15 அணியில் இடம் கிடைக்காதபோது ஏமாற்றமாகவே இருந்தது: குல்தீப் யாதவ்! - கேஎல் ராகுல்

15 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதபோது மிகவும் ஏமாற்றமாக இருந்தது என இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

exclusive-kuldeep-yadav-opens-up-about-his-battle-with-depression

author img

By

Published : Mar 9, 2020, 11:33 PM IST

இந்திய அணியின் முதல் சைனாமேன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ். மிஸ்ட்ரி பந்துகள் வீசுபவர் என சர்வதேச அரங்கில் சில பந்துவீச்சாளர்களைக் கூறுவார்கள். அந்த வரிசையில் இந்த இளம் வீரரின் பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு சில போட்டிகளில் ரன்கள் விட்டுக்கொடுத்தாலும், குல்தீப் யாதவ் போன்ற பந்துவீச்சாளர்கள் ஒரே ஓவரில் ஆட்டத்தை தங்களது அணிகளின் பக்கம் ஆட்டத்தைத் திருப்பிவிடுவர். அதற்கு ஏற்றார்போல் இந்திய வீரர் குல்தீப்பும் பல போட்டிகளை இந்தியா பக்கம் திருப்பி வெற்றியை தேடித் தந்துள்ளார்.

குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ்

ஈ டிவி பாரத் செய்திகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவிடம் அவர் சிறுவயது முதல் விளையாடிய கான்பூர் மைதானத்தில் அமர்ந்து பேசுகையில், ''இந்த மைதானம் எப்போதும் ஸ்பெஷலானது. சிறுவயது முதல் இந்த மைதானத்தில்தான் கிரிக்கெட் விளையாடிவருகிறேன். எப்போதெல்லாம் இந்த மைதானம் வருவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நிச்சயம் வருவேன் என்றவரிடம் சில கேள்விகள் முன்வைத்தோம்.

தோனி பற்றி...?

தோனி இந்திய கிரிக்கெட்டுக்காக பல விஷயங்களை செய்துள்ளார். அதனால் நிச்சயம் மிஸ் செய்கிறேன். கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரும் சிறந்த விக்கெட் கீப்பர்கள்தான். ஆனால் தோனி செயல்பாடுகள் யாரோடும் ஒப்பிட முடியாதது.

ஈ டிவி பாரத் சிறப்பு பேட்டி

யு-15 இந்திய அணியில் இடம்கிடைக்காதபோது நீங்கள் தற்கொலை எண்ணங்களில் இருந்ததாக கூறப்படுவது பற்றி...?

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் எப்போதும் எனக்கு இருந்ததில்லை. அது வதந்தி மட்டுமே. ஆனால் யு-15 அணியில் இடம்கிடைக்காத போது மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

எமோஷனல் குல்தீப் யாதவ்
எமோஷனல் குல்தீப் யாதவ்

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மொயின் அலி ஆட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து எவ்வாறு வெளிவந்தீர்கள்?

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் எனக்கு சரியாக அமையவில்லை. விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை. ரன்களும் அதிகமாக விட்டுகொடுத்தேன். அதனால் அந்த நேரம் கொஞ்சம் எமோஷனலாக அமைந்துவிட்டது’’ என்றார்.

இதையும் படிங்க: தோனி நினைக்கும் வரை ஆடட்டும்... இது நன்றிக்கான நேரமல்ல!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.