ETV Bharat / sports

‘இங்கிலாந்து குறை சொல்வதை விடுத்து, ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்’ - சித்தார்த் கவுல்

இங்கிலாந்து அணி குறை சொல்வதை விட்டு விட்டு, தங்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டுமென ஈடிவி பாரத் நேர்காணலில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல் தெரிவித்துள்ளார்.

EXCLUSIVE: England must focus on its skills and stop complaining, says Pacer Siddharth Kaul

author img

By

Published : Mar 5, 2021, 3:15 PM IST

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்காக விளையாடிவரும் இவர், சிறப்பான பந்துவீச்சு காரணமாக அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்கிறார்.

மேலும் இந்திய அணிக்காக மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள கவுல், தனது இடத்தை தக்கவைக்க தவறிவிட்டார் என்பதே நிதர்சன உண்மை.

சமீபத்தில் நடந்து முடிந்த சயீத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக பந்துவீசி 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்நிலையில், சித்தார்த் கவுல் ஈடிவி பாரத்துடன் சிறப்பு நேர்காணலில் பங்கேற்றார். அதுகுறித்த தொகுப்பு இதோ..!

கேள்வி: 2008ஆம் ஆண்டு (U19) உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் கடைசி ஓவரை வீசியது எப்படி இருந்தது?

சித்தார்த் கவுல்: கிரிக்கெட்டில் நீங்கள் முதல் ஓவரை வீசினாலும், கடைசி ஓவரை வீசினாலும் உங்களுக்கு அழுத்தம் என்பது கண்டிப்பாக இருக்கும். அதிலும் நீங்கள் விளையாடும் போட்டியை ஒரு நாடே பார்க்கிறது என்றால், அப்போட்டியில் வீரர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இருப்பினும் நான் என்னால் முடிந்தவற்றை அப்போட்டியில் செய்தேன்.

கேள்வி: இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது?

சித்தார்த் கவுல்: இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது, நான் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தேன். போட்டியின் போது போட்டி நடுவர் வாக்கி டாக்கி மூலம் களநடுவரிடம் நான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தியைக் கூறியுள்ளார்.

அப்போது களநடுவர் அச்செய்தியை என்னிடம் கூற முயற்சித்தார், ஆனால் அவர் கூறியது எதுவும் எனக்கு புரியவில்லை. நான் தொடர்ந்து பந்துவீசுவதில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். அந்த ஓவருக்கு பிறகு கள நடுவர் என்னிடம் அச்செய்தியை கூறினார்.

நான் உற்சாகத்தில் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றேன். அதன்பின் உடனே களத்திலிருந்த ஹர்பஜன் சிங்கை கட்டி தழுவி எனது உணர்ச்சியை வெளிப்படுத்தினேன்.

கேள்வி: டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நீங்கள் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவீர் என நினைக்கிறீர்களா?

சித்தார்த் கவுல்: நான் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்படுவது குறித்து இன்னும் சிந்திக்கவில்லை. எனக்கு தற்போதுள்ள எண்ணம் ஒன்று மட்டும் தான். அது வரவுள்ள ஐபிஎல் தொடரில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே.

கேள்வி: உங்களைப் பொறுத்தவரை இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன் யார்? தோனியா அல்லது கோலியா?

சித்தார்த் கவுல்: என்னைப் பொறுத்தவரை இந்திய அணியை வழிநடத்தும் ஒவ்வொரு வீரரும் மிகச்சிறந்த கேப்டன்கள் தான். தற்போதுள்ள இந்திய அணியை விராட் கோலி வழிநடத்துவதால், அவரே சிறந்த கேப்டன் என கூறுவேன். அதேபோல் வருங்காலத்தில் வேறு யாரேனும் இந்திய அணியை வழிநடத்தினால் அவர்களை சிறந்த கேப்டன் என கூறுவேன்.

கேள்வி: சர்வதேச கிரிக்கெட்டில் மைதானம், பிட்ச் குறித்து தற்போது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு உங்களது பதில்?

சித்தார்த் கவுல்: இது மிகப்பெரிய விஷயம் அல்ல. ஏனெனில் இரு அணிகளும் ஒரே மைதானத்தில்தான் விளையாடுகிறார்கள். அப்படி இருக்க பிட்ச் குறித்து ஒரு அணியை மட்டும் எப்படி குறை கூற முடியும்.

மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான போது பிட்ச் குறித்து ஒருவரும் போசாதது ஏன். இத்தொடரில் 8ஆவது வரிசையில் களமிறங்கிய அஸ்வின் சதமடிக்கும்போது, இங்கிலாந்து வீரர்களால் விளையாட முடியாதா.

அதனால் இங்கிலாந்து வீரர்கள் பிட்ச் குறித்து குறைகூறுவதை விடுத்து, அவர்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்தினாலே போதும்.

இதையும் படிங்க: 90’ஸ் ஹீரோக்கள் ரீ எண்ட்ரி; காத்திருப்பில் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.