இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை இந்திய அணி 3-1, 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் மார்ச் 23ஆம் தேதி முதல் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி புனேவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 17 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியில் ஜேக் பால், கிறிஸ் ஜோர்டன், டேவிட் மாலன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் முழங்கை காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒருநாள் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
-
🏴 England have named a 14-member squad for their ODI series against India, starting 23 March.
— ICC (@ICC) March 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Jofra Archer misses out because of an elbow injury.#INDvENG pic.twitter.com/CXNaWHBHI3
">🏴 England have named a 14-member squad for their ODI series against India, starting 23 March.
— ICC (@ICC) March 21, 2021
Jofra Archer misses out because of an elbow injury.#INDvENG pic.twitter.com/CXNaWHBHI3🏴 England have named a 14-member squad for their ODI series against India, starting 23 March.
— ICC (@ICC) March 21, 2021
Jofra Archer misses out because of an elbow injury.#INDvENG pic.twitter.com/CXNaWHBHI3
இங்கிலாந்து ஒருநாள் அணி: இயான் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், டாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், மாட் பார்கின்சன், ஆதில் ரஷித், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டாப்லே, மார்க் வுட், ஜேக் பால், கிறிஸ் ஜோர்டன், டேவிட் மாலன்.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் ஆர்ச்சர் பங்கேற்பது சந்தேகம்?