இந்திய வீரர்களுக்கான பிசிசிஐயின் புதிய ஒப்பந்த விவரம் நேற்று வெளியானது. அதில் பிசிசிஐ உடனான தோனியின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதனால் தோனி மீண்டும் இந்திய கிரிக்கெட்டிற்கு வரமாட்டார் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு வலுசேர்க்கும் வகையில் சிஎஸ்கே அணியின் வீரரான ஹர்பஜன் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ''இந்திய அணிக்காக தோனி மீண்டும் நீல நிற ஜெர்சி அணிந்து களமிறங்குவார் என நான் நினைக்கவில்லை. அவர் இந்த வருட ஐபிஎல் தொடருக்காகத் தயாராகிவருகிறார். கடந்த உலகக்கோப்பையுடன் தோனி தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார்.
இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் தோனி நிச்சயம் அசத்துவார் என்று முழுநம்பிக்கை உள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும், இந்திய அணிக்குள் மீண்டும் தோனி வரமாட்டார். தோனிக்காக ஆடும் 11 வீரர்களிலிருந்து ரிஷப் பந்த்தை நீக்கமுடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்திய வீரர் தோனி ஜார்க்கண்ட் ரஞ்சி அணியுடன் தனது பேட்டிங் பயிற்சியைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிரேட் பி-க்கு தள்ளப்பட்ட மிதாலி ராஜ்!