ETV Bharat / sports

'மழையை தோற்கடிக்குமா நியூசிலாந்து?' - இந்திய ரசிகர்கள் குதூகலம்

மான்செஸ்டர்: "உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகளில் மழையின் குறுக்கீடு இருந்தால் என்ன விதிமுறைகள் செயல்படுத்தப்படும்" என்று ஐசிசி அறிவித்துள்ளது.

நியூசிலாந்து
author img

By

Published : Jul 8, 2019, 5:43 PM IST

Updated : Jul 8, 2019, 8:08 PM IST

2019ஆம் ஆண்டிற்கான உலககோப்பைத் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெறுகிறது. லீக் சுற்று முடிவடைந்த நிலையில் அரையிறுதிக்குச் செல்லும் அணிகளும் உறுதி செய்யப்பட்டுவிட்டன. முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் நான்காம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் நாளை மோதுகின்றன.

இங்கிலாந்தில் மழைக்காலம் என்பதால் லீக் சுற்றின் பெரும்பாலான ஆட்டங்களில் மழையின் குறுக்கீடு இருந்தது. இதனால் மிக முக்கிய ஆட்டமான இந்திய-நியூசிலாந்து ஆட்டமும் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு அணிகளும் லீக் சுற்றில் மோத முடியாமல் போனதால் எதிரணியின் பலம் மற்றும் பலவீனம் தெரியாமல் நேரடியாக அரையிறுதியில் மோதவிருக்கின்றன.

ஒரு வேளை அரையிறுதி போட்டிகளில் மழையின் குறுக்கீடு இருந்தால் போட்டி நடந்த மறுநாள் அதே அணிகளும் மோதும் என ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் மறுநாளும் மழை பெய்தால் 15 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி போட்டியின்றி இறுதிப்போட்டிக்குச் செல்லும் எனவும் கூறியுள்ளது.

இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் மழை வருவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவே தகவல் தெரிவித்துள்ளது. மழையின் புண்ணியத்தால் இந்திய அணி இறுதிப் போட்டிக்குச் செல்லுமா என்பது இன்னும் இரு தினங்களில் தெரிந்து விடும்.

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 8, 2019, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.