ETV Bharat / sports

கோவாவில் காதலியைக் கரம்பிடிக்கவிருக்கும் பும்ரா! - ஜஸ்பிரீத் பும்ரா சஞ்சனா கணேசன்

ஜஸ்பிரீத் பும்ரா தனது காதலியும் தொகுப்பாளினியுமான சஞ்சனா கணேசனை இந்த மாதம், கோவாவில் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

ஜஸ்பிரீத் பும்ரா  சஞ்சனா கணேசன்
ஜஸ்பிரீத் பும்ரா சஞ்சனா கணேசன்
author img

By

Published : Mar 13, 2021, 2:24 PM IST

இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கும், தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனுக்கும் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ள நடிகை தாரா சர்மா சலுஜா, ஜஸ்பிரீத் பும்ரா, சஞ்சனா கணேசன் இருவரையும் குறிப்பிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கடந்த மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, தனிப்பட்ட காரணங்களால் தன்னை போட்டியிலிருந்து விடுவிக்குமாறு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) பும்ரா கேட்டுக் கொண்டார். அதேபோல், பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கிய சஞ்சனாவும் சமீப காலமாக ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இருவரது திருமணம் குறித்த செய்தி தற்போது வெளியாகி உள்ளது. தவிர திருமணத்திற்காக 20 விருந்தினர்கள் மட்டுமே கோவா செல்லவிருப்பதாகவும், விருந்தினர்கள் திருமணத்திற்கு செல்போன் கொண்டுவர அனுமதிக்கப்படவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'தவறுகளை ஒப்புக்கொண்டு சரியான நோக்கத்துடன் வீரர்கள் மீண்டு வரவேண்டும்' - கோலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.