ETV Bharat / sports

ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் நடத்தப்படும் - பிசிசிஐ உறுதி

author img

By

Published : Jun 17, 2020, 1:41 AM IST

மும்பை: செப்டம்பர், நவம்பர் மாதங்களில் பெங்களூரு மற்றும் சென்னை கிரிக்கெட் மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளன.

bcci-determined-to-host-ipl-2020-tentative-dates-revealed

கரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்த 13ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை பிசிசிஐ தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை, நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆடவர் டி20 உலகக்கோப்பைத் தொடர் தற்போது நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தத் தொடர் நடைபெறுமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என்பது குறித்த இறுதி முடிவை ஐசிசி அடுத்த மாதம் எடுக்கவுள்ளது.

இதனிடையே டி20 உலக கோப்பைத் தொடர், 2022ஆம் ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்படும் எனவும்; அந்த இடைப்பட்ட காலத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகின.

டி20 உலக கோப்பைத் தொடர் முடிவு குறித்து, ஐசிசி எடுக்கும் முடிவைப் பொறுத்தே ஐபிஎல் டி20 தொடர் நடைபெறும் என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் நவம்பர் எட்டாம் தேதி வரை, ஐபிஎல் டி20 தொடரை பிசிசிஐ நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.