ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது இரண்டுப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று பிரிஸ்பேனில் தொடங்கியது.
இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அசாத் ஷஃபிக் 76 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்சல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ் இணை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை பிரித்து மேய்ந்தது.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இருவரும் அரை சதமடித்து அசத்த அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டியது. தொடர்ந்து அதிரடியில் மிரட்டி, வந்த வார்னர் சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 22ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
அவரைத் தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்கப்பட்ட ஜோ பர்ன்ஸ் 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யாஷிர் ஷா வீசிய பந்தில் போல்ட் ஆகி மூன்று ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். அவரைத் தொடர்ந்து வார்னருடன் இணைந்த மார்னஸ் லாபுசாக்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மறுமுனையில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் நான்காவது முறையாக 150 ரன்களைக் கடந்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து லபுசாக்னே சர்வதேச டெஸ்டில் தனது ஆறாவது அரை சதத்தை அடித்து அசத்தினார்.
-
A day of complete dominance by Australia as they finish at 312/1, already 73 runs ahead. Warner led the way for the hosts with a masterful 151*, while Burns (97) and Labuschagne (55*) chipped in. #AUSvPAK Scorecard ⬇️https://t.co/0d3zlDrR8C pic.twitter.com/bqOR6XTrM9
— ICC (@ICC) November 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A day of complete dominance by Australia as they finish at 312/1, already 73 runs ahead. Warner led the way for the hosts with a masterful 151*, while Burns (97) and Labuschagne (55*) chipped in. #AUSvPAK Scorecard ⬇️https://t.co/0d3zlDrR8C pic.twitter.com/bqOR6XTrM9
— ICC (@ICC) November 22, 2019A day of complete dominance by Australia as they finish at 312/1, already 73 runs ahead. Warner led the way for the hosts with a masterful 151*, while Burns (97) and Labuschagne (55*) chipped in. #AUSvPAK Scorecard ⬇️https://t.co/0d3zlDrR8C pic.twitter.com/bqOR6XTrM9
— ICC (@ICC) November 22, 2019
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 317 ரன்களைக் கடந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் டேவிட் வார்னர் 151 ரன்களுடனும், லபுசாக்னே 55 ரன்களுடனும் களத்திலுள்ளனர். பாகிஸ்தான் அணி சார்பில் யாஷிர் ஷா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: மகளிர் டி20 தரவரிசைப் பட்டியல் - ரோட்ரிக்ஸ், ஷாபாலி வர்மா அசத்தல்!