AUSvSL: ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியானது நாளை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இத்தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை முழங்காலில் காயமடைந்தார்.
இதன் காரணமாக இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றிருந்த அவர் இந்த இரு தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்தும் விலகியுள்ளார். இவர் காயமடைந்த போதிலும், மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ், பில்லி ஸ்டான்லேக், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் பந்துவீச்சில் மிரட்ட காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் ஆண்ட்ரூ டை டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராகக் கருதப்படுகிறார். தற்போது அவர் விலகியுள்ளதால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதே சமயம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனான ஆரோன் பின்ச் காயத்திலிருந்து மீண்டு(ம்) அணிக்குத் திரும்பியுள்ளார்.
-
Australia fast bowler Andrew Tye has been ruled out of the #AUSvSL T20I series due to elbow injury.
— ICC (@ICC) October 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Aaron Finch has been cleared to play in the first T20I.
Find out more 👇https://t.co/tHq2a9G3BV
">Australia fast bowler Andrew Tye has been ruled out of the #AUSvSL T20I series due to elbow injury.
— ICC (@ICC) October 26, 2019
Aaron Finch has been cleared to play in the first T20I.
Find out more 👇https://t.co/tHq2a9G3BVAustralia fast bowler Andrew Tye has been ruled out of the #AUSvSL T20I series due to elbow injury.
— ICC (@ICC) October 26, 2019
Aaron Finch has been cleared to play in the first T20I.
Find out more 👇https://t.co/tHq2a9G3BV
ஆஸ்திரேலிய டி20 அணி: ஆரோன் பிஞ்ச் (கே), ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பட் கம்மின்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், பென் மெக்டெர்மொட், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், பில்லி ஸ்டான்லேக், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர், ஆண்ட்ரூ டை, டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.
இதையும் படிங்க: கிரிக்கெட் வீரர்களுக்கு குளிர்பானங்களை கொண்டு வந்த பிரதமர்