சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம், இன்று (பிப்.14) தொடங்கியது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸை நிறைவு செய்தது. பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியினர், அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோரது அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து இரண்டாம் நாள் தேநீர் இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஃபோக்ஸ் 42 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
-
What a spell from R Ashwin!
— ICC (@ICC) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
He claimed his 29th Test five-wicket haul – the joint-seventh in the all-time list with Glenn McGrath 👏#INDvENG pic.twitter.com/7ja9lAqG2L
">What a spell from R Ashwin!
— ICC (@ICC) February 14, 2021
He claimed his 29th Test five-wicket haul – the joint-seventh in the all-time list with Glenn McGrath 👏#INDvENG pic.twitter.com/7ja9lAqG2LWhat a spell from R Ashwin!
— ICC (@ICC) February 14, 2021
He claimed his 29th Test five-wicket haul – the joint-seventh in the all-time list with Glenn McGrath 👏#INDvENG pic.twitter.com/7ja9lAqG2L
இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 43 ரன்களை மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் 29ஆவது முறையாக ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 200 இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
-
A five-wicket haul for R Ashwin and England are all out for 134 🏏
— ICC (@ICC) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
How will India fare in the second innings? #INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/yhN0sw1eB1
">A five-wicket haul for R Ashwin and England are all out for 134 🏏
— ICC (@ICC) February 14, 2021
How will India fare in the second innings? #INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/yhN0sw1eB1A five-wicket haul for R Ashwin and England are all out for 134 🏏
— ICC (@ICC) February 14, 2021
How will India fare in the second innings? #INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/yhN0sw1eB1
இதையடுத்து 195 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கியது. இன்னிங்ஸின் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா - சுப்மன் கில் இணை எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளுக்குப் பறக்கவிட்டு அசத்தினர்.
அதன்பின் 14 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில், ஜேக் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய புஜாரா, ரோஹித் சர்மாவுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன்மூலம் இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 25 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து 249 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளது.
இதையும் படிங்க: மூன்றாவது டெஸ்ட்: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!